மகிழுந்து(car) ஓட்டும் நாய்!

 நன்றி உள்ள ஜீவன் நாய் என்பது எல்லோருக்கும் தெரியும் . பயிற்சி கொடுத்தால் நாம் விளையாடும் பந்தை தொலைவில் போட்டால் கவ்வி எடுத்து வரும்,  மோப்பம் பிடித்து  துப்புத்  துலக்க உதவும், மனிதர்களுக்கு  பல  உதவிகள் செய்யும், ஒரு உடன் துணை ,  வீட்டுக் காவல் என்று இந்த நன்றியுள்ள ஜீவனுக்கு பல சிறப்புகள் . இப்போது  நியுஜீலாந்தில் உள்ள மிருக வதைத் தடுப்பு சங்கம் போர்ட்டர் , ஜென்னி, மோன்ட்டி என்கிற மூன்று நாய்களுக்கு மகிழுந்து  ஓட்டக் கற்றுக் கொடுத்து அவை ஓட்டவும்   செய்கின்றன . அவை ஓட்டுவதற்கு தகுந்த படி  திருப்பும் சக்கரம் , கியர் மாற்று ஆகியவற்றில் சிறிது மாறுதல் செய்யப் பட்டிருக்கிறது .

உரிமையாளர்களால் புறக்கணிக்கப் பட்டு மிருக வதை சங்கத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்த நாய்கள் மெச்சத் தகுந்தவை . இங்கும் இது போல முயற்சிக்கலாம் என்று நினைக்க வைக்கின்றன . அவை வாழ்க வளமுடன்!

Comments

  1. நாய்களுக்கு வாழ்த்துக்கள்.வியப்பான தகவலுக்கு நன்றி....

    ReplyDelete
  2. பின்னூட்டத்துக்கு நன்றி. நாய்களுக்கு படிக்கவும் கற்றுக் கொடுத்தால் தங்களைப் பற்றி எழுதியிருக்கும் இதையும் படிக்கும!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்