பேஸ்புக் - சினாப்ஸ் என்னும் பிரமாஸ்திரம்

பேஸ்புக் - அனைத்து அத்தியாயங்களும்

மார்க் அமர்ந்திருந்த அறை முழுவதும் மெல்லிய இசை பரவிக் கொண்டிருந்ததது. தனது நண்பருடன் பிலிப் எக்ஸ்ட்டர் அகடமியின் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அமெரிக்கக் கல்வி நிலையங்களைப் பொறுத்த வரை மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டில் ஏதேனும் ப்ராஜெக்ட் செய்து சமர்பித்திருக்க வேண்டும். அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் ப்ராஜெக்ட் தரத்தைப் பொறுத்தே தங்கள் கல்லூரிகளில் இடம் கொடுக்கும். சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மாணவர்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி ப்ராஜெக்ட் செய்வது வழக்கம். 


ள்ளியின் இறுதி ஆண்டு ப்ரோஜெக்ட்டை தனியாகவோ அல்லது இரண்டு மூன்று பேர் கொண்ட குழுவாக சேர்ந்து செய்யலாம். அடம்ஸ் டி ஏஞ்சலோ, மார்க்கின் பள்ளி தோழர். இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் செய்வதற்காக தன்னை மார்க்குடன் விரும்பி இணைத்துக் கொண்டவர். மார்க்கின் அறையில் இருவரும் இணைந்து விவாதித்துக் கொண்டிருந்தனர். பிற மாணவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் வெகு நேரம் விவாதம் நடந்து கொண்டிருந்தது. என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்களால் தீர்மானிக்கவே முடியவில்லை. விவாதத்தின் இடையிடையே ஆடம்ஸ் கணினியில் தனக்குப் பிடித்த பாடல்களை மற்றிக் கொண்டே இருந்தார், ஒரு கட்டத்தில் அது சலித்துப் போகவே பாடல்கள் தீர்ந்து கணினி தியான நிலைக்கு சென்றது. அறையில் திடிரென்று அமைதி மார்க் ஆடம்ஸைப் பார்த்தார். 

"ப்ளேலிஸ்ட் முடிஞ்சு போச்சு" என்றார் ஆடம்.  நாம் பாடல்கள் கேட்கும் மென்பொருள்களில் ப்ளேலிஸ்ட் என்று வசதி உண்டு, அதில் நாம் கேட்கப் போகும் பாடல்களை வரிசைப்படுத்தினோம் என்றால், ப்ளேலிஸ்ட் நம்மை தொந்தரவு செய்யாமல் தன் வேலையையும் நாம் நம் வேலையையும் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த ப்ளேலிஸ்ட் பற்றி சற்றே தாமதித்து கொஞ்சம் விரிவாகப் பாப்போம், அதற்கு முன் மார்க் என்ன ப்ராஜெக்ட்  செய்யப் போகிறார் என்பது பற்றி பார்த்துவிடுவோம். 

ன்றைய விவாதம் நடக்கும் நேரம் முழுவதும் மார்க்கும் ஆடமும் பலமுறை ப்ளேலிஸ்ட்டை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்கள். 

"ஆடம் என்ன கணினி இது, நாம் எத்தனை முறை இதில் பாடல்கள் கேட்டிருப்போம், நமக்கு என்ன்ன படல்கள் பிடிக்கும் என்பது கூடவா இந்தக் கணினிக்கு தெரியாது, ஒவ்வொரு முறையும் நாம் ப்ளேலிஸ்ட்டை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இந்தக் கணினி நினைக்கிறது, எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை" சற்றே குரலை உயர்த்திக் கூறினார் மார்க்.

"மார்க் அது கணினி, அதற்கு மனிதர்களைப் போல் மூளை எல்லாம் கிடையாது, நம் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஒரு தானியங்கி, அதில் இதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்க முடியாது" ஆடம்ஸ்.

"கணினிக்கு மூளை இல்லை, ஆனால் நமக்கு மூளை இருக்கிறதே, நமக்கு என்ன பாடல் பிடிக்கும் என்பதை அதற்குக் கற்றுக் கொடுப்போம்" சிரித்துக் கொண்டே ஆடம்ஸை பார்த்தார் மார்க்.

மார்கிற்கும் ஆடம்ஸிற்கும் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது புரிந்து விட்டது, நமக்கு என்ன பாடல்கள் பிடிக்கும் என்பதை எப்படி கணினிக்கு கற்றுக் கொடுக்க முடியும், இது சாத்தியமா என்ன? சாத்தியம் தான். இன்று நம் மென்பொருள்களில் அந்த வசதி உண்டு. நாம் எந்தப் பாடல்களை அல்லது இசைத் தொகுப்புகளை அடிக்கடி கேட்கிறோம் என்பதை மென்பொருள் பதிவு செய்து வைத்துக் கொள்ளும், மேலும் அடிக்கடி கேட்கும் பாடல்களுக்கு அதிக ரேட்டிங்கும், கேட்காதா பாடல்களுக்கு குறைவான ரேட்டிங்கும் கொடுக்கும். உங்கள் கணினியில் அதிக ரேட்டிங் இருக்கும் ப்ளேலிஸ்ட்டை தேர்ந்தெடுத்துப் பாருங்கள் அதில் உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் அதிக நேரம் கேட்டு ரசித்த பாடல்களே அடங்கி இருக்கும், சந்தேகமே இல்லை இப்படி ஒரு மென்பொருளுக்கான ஆரம்ப வித்து மார்க் மற்றும் ஆடம்ஸ் குழுவினரிடமிருந்தே வந்தது.

மார்க் எடுத்த எடுப்பில் ப்ரோக்ராம் எழுத ஆரம்பிக்க மாட்டார், என்ன செய்யப் போகிறோம் என்பதை முதலில் ஒரு படம் போல் மனதினுள் ஓட்டுவார். அதில் வெளிப்படும் சிந்தனைகளை குறிப்பெடுத்துக் கொள்வார், இதனை பேப்பர் வொர்க் என்று சொல்வார்கள், கணினித் துறையைப் பொறுத்த வரை வெகு சிலரே இந்த பேப்பர் வொர்க்கை பயன்படுத்துவார்கள், பெரும்பாலனவர்கள் நேரடியாக ப்ரோக்ராம் எழுதுவதற்கு கணினி முன் அமர்ந்து தங்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருப்பார்கள்.  

தாம் என்ன செய்யபோகிறோம் என்ற முடிவுக்கு வந்த பின் மார்க்கும் ஆடம்ஸும் மென்பொருள் தயாரிப்பில் இறங்கினார்கள், நன்றாக ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள் இவர்கள் இருவரும் இன்னும் தங்கள் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டி இருக்கவில்லை. மார்க்கைப் பொறுத்த வரை அவருக்கு ப்ரோக்ராமிங் நன்றாக வரும் ஆடம்ஸை பொறுத்த வரை அவருக்கு டிசைனிங் நன்றாக வரும், அதனால் ப்ரோக்ராமிங் வொர்க் மார்கிற்கும், டிசைனிங் ஆடம்ஸிற்கும் என்று பிரித்துக் கொடுக்கப்பட்டது. பாடல்களின் ரசிப்புத் திறன் மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும். ஒருவருக்கு அதிரடி பிடிக்கும் மற்றவருக்கு மெலடி, சிலருக்கு நாட்டுபுறப் பாடல்கள் பிடிக்கும், சிலருக்கோ தெய்வீககானங்கள் மட்டுமே பிடிக்கும். முக்கியமான விஷயம் சிலருக்கு மேற்கூறிய ரகங்கள் அனைத்தும் பிடித்தும் போகலாம், அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட ரகங்கள் பிடித்துப் போகலாம்.

யோசித்துப் பார்த்தால் சற்றே, இல்லை இல்லை மிகவும் சிக்கலான விஷயம் தான். மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களுக்கே வராத சிந்தனை இது. தாங்கள் வடிவமைக்க நினைத்ததையும் விட மிகச் சிறப்பாக வந்திருந்தது அந்த மென்பொருள், அதற்க்கு அவர்கள் வைத்திருந்த பெயர் சினாப்ஸ்மார்க்கும் ஆடம்ஸும் சற்றும் எதிர்பார்த்திர்க்க மாட்டார்கள் சினாப்ஸ் பல அற்புதங்களை தங்கள்  வாழ்வில் நிகழ்த்தப் போகிறது என்பதை. பள்ளியில் தங்கள் ப்ரோஜெக்ட்டை சமர்பித்த அதே நேரத்தில் இணையத்திலும் சினாப்ஸை வெளியிட்டார்கள். 

மெரிக்க இணையத்தை பற்றியும் இசை உலகைப் பற்றியும் சில தகவல்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அமெரிக்காவில் எந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதைக் காசு கொடுத்து தான் வாங்கியாக வேண்டும், மென்பொருளாக இருந்தாலும் சரி மியூசிக் ஆல்பமாக இருந்தாலும் சரி காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். அதனால் தான் அமெரிக்க இசை உலகில் பெரும்பாலனவர்கள் மிகப் பெரும் பிரபலங்களாக, பணக்காரர்களாக இருகிறார்கள். அமெரிக்காவில் மியூசிக் ஆல்பங்களை பரிசுப் பொருளாக கொடுப்பவர்கள் அதிகம். உதாரணத்திற்கு அமெரிக்கர்கள் ஐட்யூன்களை காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதை பிறந்த நாள், திருமண நாள் பரிசாக அளிப்பார்கள். மேற்கத்தியர்கள் பெரும்பாலான நேரங்கள் இசையையும் இசை குறித்த மென்பொருள்களையும் தேடிக்கொண்டே இருப்பார்கள். இசைக்கு என்று பல இணைய தளங்கள் குழுமங்கள் உண்டு.

மார்க் அப்படி ஒரு தளத்தில் தான் சினாப்ஸை இலவசமாக வெளியிட்டு இருந்தார். மாணவர்கள் தயாரித்த டிசைன் என்பதால் அந்த டிசைன் அவர்களை பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை, ஆனால் சினாப்சின் சிறப்பம்சம் என்று மார்க் குறிப்பிட்டு இருந்த ஒரு வாசகம் அமெரிக்கர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. 'ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் நுட்பம் உடைய ப்ளேலிஸ்ட் வசதியுடன்  கூடிய மென்பொருள், உங்களுக்கு விருப்பமான பாடலை அதுவே கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது' என்பது தான் அந்த வாசகம். ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் தற்கால ரோபோடிக்ஸ் தொழில்நுட்பவியலை சாத்தியமாக்கும் ஒரு காரணி. தானியங்கி பொருள்களுக்கு மூளையாகவும், தன்னிச்சையாக இயங்க கட்டளைகள் பிறப்பிக்கும் ஒரு கருவியாகவும் விளங்கும் நுட்பம். ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் என்ற வார்த்தை அவர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. அது எப்படி இயங்குகிறது, நமக்குப் பிடித்த பாடலை எப்படி கிரகித்துக் கொள்கிறது என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்க அமெரிக்கர்கள் ஆயத்தமானார்கள். 

ச்சரியம்! மார்க் அந்த மென்பொருளை எப்படி இயங்க வேண்டும் என்று வடிவமைதாரோ அப்படியே இயங்கியது. தங்களுக்குப் பிடித்த பாடலை தானாகவே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் சினாப்சை அமெரிக்கர்களுக்கு பிடித்துப் போய்விட்டது. பலரும் இணையத்தில் இது குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலருக்கு அதன் வடிவமைப்பு மிக சாதரணமாக தோன்றினாலும் பள்ளி மாணவர்களின் தயாரிப்பு என்பது தெரிந்ததும் இன்னும் ஆர்வமாக அதை உபயோகப் படுத்த ஆரம்பித்தார்கள்.

மைக்ரோசாப்ட், ஏ ஒ எல், வின்ஆம்ப் போன்ற நிறுவனங்கள் மார்க்கையும் ஆடம்ஸையும் மொய்க்கத் தொடங்கினார்கள். அந்த மென்பொருளை மில்லியன் டாலர்களுக்கு வாங்கவும், மார்க் மற்றும் ஆடம்சிற்கு வேலை கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். மார்க் ஆடம்ஸ் அதை ஏற்றார்களா, சினாப்ஸ் என்னவாகியது?


நாம் முழுவதுமாக பேஸ்புக் ஏஜிற்குள் நுழையப் போகிறோம். மார்க்கின் மீதான பிரமிப்பு குறையாமல் காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம்.    

Comments

 1. ஆஹா! நண்பரே! எவ்வளவு விஷயங்களை சொல்லிருக்கிங்க, முழுவதும் தெரிந்துக்கொள்ள துடிக்கிறேன், இன்னும் ஒரு வாரம் காத்திருக்கனுமா? ஐயோ கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்களேன். அந்த மென்பொருளின் தரவிறக்க லிங்க் கொடுத்தால் ரொம்ப நல்லாருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி தொடருங்கள் அடுத்த பகுதியை.

  ReplyDelete
 2. அருமை. படிப்படியாக அருமையாகச் சொல்லி வருகிறீர்கள்.

  ReplyDelete
 3. கிளிப் பிள்ளைக்கு சொல்வது போலே சொல்கிறீர்கள் அருமை

  ReplyDelete
 4. I feel like a watching a movie....very impressive writing....by the way can you speed up quick to continue this story....I'm eagerly waiting for the next series..!!!!!

  Thanks for your effort..!!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்