தெரிந்து கொள்ளுங்கள் - பகுதி 1


நம்மை சுற்றி பல நிகழ்ச்சிகள் நடக்கிர்ன்றன . பல தகவல்கள் நாக்கு தெரியும் சில தெரியாது . அப்படி நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் சில தகவல்களை நாம் தொடராக பார்ப்போம் .

இவற்றில் சில உங்களுக்கு முன்பே தெரிந்து இருக்கலாம் , பல தெரியாமல் இருக்கலாம் . ஏதேனும் தவறான தகவல் இருந்தால் சொல்லுங்கள் .

 • மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

 • பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

 • உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

 • ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

 • மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

 • பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

 • பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

 • நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

 • நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

 • ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

 • தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

 • முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

 • தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

 • மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

 • புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

 • நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

 • தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்

 • ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

 • துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

 • பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

அன்புடன்

Comments


 1. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய தகவல் நன்றி சகோ.

  ReplyDelete
 2. அனைத்தும் ஆச்சர்யமான தகவல்கள்! ஒட்டகப்பால் மட்டும் கறந்தவுடன் தயிராகிவிடும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்