நீங்கள் அரசியல்வாதி ஆகவேண்டுமா ?
சாமியார் ஆவது எப்படி ? டாக்டர் ஆவது எப்படி? ஆசிரியர் ஆவது எப்படி? பிளாக்கர் ஆவது எப்படி? ஏன் சாமியார் ஆவது எப்படினு கூட எல்லாரும் எழுதிட்டாங்க. ஆனா அரசியல்வாதி ஆவது எப்படினு யாரும் எழுதவில்லை. இந்த உலகத்திலேயே அதை எழுத சிறந்த நபர் நீங்கள்தான் என கூறி என்னை எழுததூண்டிய 1,00,000 க்கு மேற்ப்பட்ட பதிவர்களுக்கு நன்றி.(அண்ணே சைபருக்கு மதிப்பில்லை விடுங்க ...)

  1. கட்சியை தெரிவு செய்யுங்கள்.

·         எதாவது ஒரு கட்சியில்  சேருங்கள். கொள்கை, கன்றாவிலாம் பாக்காதீங்க( எந்த கட்சில இதெல்லாம் இருக்கு?).

·         அந்த கட்சியில் உங்கள் ஊர் முக்கிய புள்ளியின் பிறந்த நாள், மகள் வயசுக்கு வந்த நாள், அவர் முதல் முறை குப்புர படுத்த நாள் என அனைத்து நாளுக்கும் வாழ்த்து போஸ்டர் அடித்து அவர் கண்னில் படும் இடத்தில் ஒட்டவும்.


  1. தலைமையை காக்காபிடிக்கவும்.

·         கட்சி தலைவருக்கு பேதிவந்தா கூட உடனே அவருக்காக மண் சோறு சாப்பிடனும்(அதையும் போட்டோ எடுத்துகனும்).
·         வருங்கால நிரந்தர முதல்வர், ஜனாதிபதி, அமெரிக்க அதிபர் என வாய்ல வந்தத அடிச்சுவிடனும்.
·         தலைவர் கைது செய்யபடலாம் என செய்தி வந்ததும் மண்னனெய்ல தண்னிய கலந்து மேல ஊத்திகனும்(வேண்டாம்னு தடுக்க 5 பேர் ரெடியா இருக்கனும்)

  1. போட்டோ .

·         வெள்ளை வேட்டி, சட்டையில் கும்பிடுவதுபோல, வயதான கிழவியை கட்டிபிடிப்பது போல, குழந்தையுடன் உட்காந்து சாப்பிடுவது போல, 1000 மக்கலுக்கு மத்தில நிற்ப்பது போல, யேசு, ராமர், காந்தி, போல போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  1. வாக்குறுதிகள் :

·         எந்த அரசியல்வாதியும் சொன்னதை செய்யபோவதில்லை. எனவே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களூக்காக சில..

·         18 வயது உள்ளவர்கள் ஒரு ஓட்டு போடலாம் என்பது போல 36 வயது உள்ளவர்கள் 2 ஓட்டு போடலாம்.

·         எங்கள் ஆட்சியில் வங்கால விரிகுடாவில் கண்டிப்பாக தூறு வாரப்படும்

·         எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.

·         இலங்கையில் மக்கள் தொகைகுறைய நான்கள் தான் காரணம்.

·         எங்களுடன் கூட்டணி வைக்க ஓபாமாவே ஆசைப்பட்டார்.

விரைவில் : 
சாதிசன்டையை தூ ண்டுவது  எப்படி ?

அறிக்கை  விடுவது எப்படி ?

ஊழல் செய்வது எப்படி ?

கூட்டணி சேரமாட்டேன் என சொல்லி கடைசி நேரத்தில் பல்டி அடிப்பது எப்படி ?டிஸ்கி : இவற்றை முயர்சி செய்து அடிவாங்கினால் சங்கம் பொறுப்பல்ல.

Comments

  1. நிஜமாகவே நீங்கள் எதோ டிப்ஸ் தரப் போறீங்கன்னு நினைச்சேன்!
    இருங்க, நான் அரசியவாதி ஆகி உங்கள என்ன பண்றேன்னு பாருங்க!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்