எனக்கு வந்த சத்திய சோதனை

"எனது சத்திய சோதனை  " என்ன வியப்பாய்  இருக்கிறதா? அவர் மகாத்மா சத்திய சோதனை எழுதினார். நீ ஒரு மனித ஆதமாவாய் இருப்பதே பெரிய விசயம் என்ற குமுறல் சப்தம் என் செவிகளில் ஒலிக்கிறது.

 இன்று காலையில் சீக்கிரமாக செய்முறை வகுப்புக்கு சென்றேன். படித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் வகுப்பு தொடங்க 2 மணி நேரம் இடைவெளி இருந்ததால் கல்லூரி நூலகம் செல்வோமே என்று போனேன்.

புத்தகங்களை தேடிப் பார்கையில், சத்திய சோதனை புத்தகம் கண்ணில் பட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி. இந்த புத்தகத்தை இவ்வளவு நாள் படிக்கவில்லையே என்ற ஆர்வத்துடன் இருக்கையில் அமர்ந்தேன். அங்கே சில புத்தகங்களை முன்னோர்கள் ( அதாங்க.. எனக்கு முன்னாடி படித்து விட்டு சென்றவர்கள்...!) வைத்து விட்டு சென்று இருந்தார்கள்.

இங்கே தாங்க ஆரம்பிக்குது எனது சத்திய சோதனையும்.....


எந்த புத்தகம் படித்தாலும் "இந்த அட்டைல இருந்த அடுத்த அட்டை வரை " அப்படின்னு சொல்வாங்களே அப்படி தாங்க படிப்பேன். சரி பதிப்பித்தவர்  என்ன சொல்லவாரார்ன்னு அவர் உரையை படிச்சேன். இங்க தான் நீங்க நல்லா கவனிக்கணும். என் மனசு இந்த புத்தகம் மேல இல்லாம மேசையில் இருந்த வேற புத்தகம் மேல போகுது, 

கொஞ்ச நேரத்துல சத்திய சோதனைய மூடி வச்சுட்டு அந்த புத்தகத்த எடுத்தேன். "அந்த புத்தகம்ன்னு சொல்ற என்ன புத்தகம்ன்னு சொல்லுல" இப்படி எல்லாம் கோவப்படக்கூடாது 

புத்தகம் பேரு "சிலுக்கு சுமிதாவின் வாழ்க்கை வரலாறு". கல்லூரி நூலகத்தில் இந்த பெயரில் ஒரு புத்தகமா அதும் ஒரு கவர்ச்சி நடிகையை பற்றியது என வியப்பு மேலிட அதை விட ஆசை மேலிட புத்தகத்தினை படிக்க ஆரம்பித்தேன். 

காந்தி தாத்தா என்னை கண்டு முகம் சுழிப்பது போல் இருந்தது. 
சிவாஜி,ஜெமினி போன்ற நடிகர்களின் வாழ்கையை பற்றி எழுதிய தீனதயாளன் என்பவர் எழுதிய புத்தகமே இது. 

படிக்க படிக்க... ஆச்சரியமாய் இருந்தது, மிகவும் கஷ்டப் பட்ட குடும்பத்தில் பிறந்த விஜி, பலரால் "இதும் ஒரு  முகமா" என்ற ஏளனமாய் பார்க்கப் பட்ட பெண் தான் சிலுக்கு.

தன்னை போலே கஷ்டபடும் இளம் கலைஞர்களுக்கு பண உதவி தாராளமாய் செய்துள்ளார். நடன படிகளை நன்றாக கற்கும் வரை விடாமல் முயற்சிப் பாராம்.

அவர் இருந்த பொழுது நட்பு கொண்ட பலர், இறந்த செய்தி கேட்டதும் " அவர்சார வெளிக்கு தங்களை உட்படுத்தி கொண்டனர்" என ஆசிரியர் குறிப்பிடும் பொழுது உலகத்தின் முகம் சற்றே எட்டிப் பார்க்கிறது. 


பாதி புத்தகம் தான் படிக்க முடிந்தது. 

"குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" என்று கண்ணதாசனை பலர் இகழ்வதுண்டு. 

தனிப் பட்ட முறையில் எவர் எப்படி இருந்தால் என்ன, நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் நம் நலனுக்கு பயன் படுத்த வேண்டும் என்பதே என் அவா...

காந்தி இப்பொழுது என்னைக் கண்டு புன்னகைத்தது போலே இருந்தது.....
விரைவில் சத்திய சோதனையை படித்து விட்டு பதிவு போடுகிறேன் அதைப் பற்றி....

"

Comments

 1. தம்பி,பலரின் தூக்கத்தின் தாக்கத்தை எடுத்த அவருக்கும் ஒருவாழ்க்கை உண்டல்லவா? மரணத்தின் பின்னனி என்ன? தகவல் அதில் உள்ளதா? இன்றும் அவரை மறக்காத ரசிகர்களின் விடைதெரியா கேள்வி...?

  ReplyDelete
 2. :) என்னடா இது சோதனை. நல்ல பதிவு.

  ReplyDelete
 3. மதுர கவி அண்ணே, விரைவில் உங்களுக்காகவே அதனைப் படித்து பதிவிடுகிறேன். அவரும் ஒரு மனுசி தானே

  ReplyDelete
 4. நன்றி ,கண்மணி, சோதனை தான்

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்