Ads Top

குட்டையை குழப்பி மீன் பிடிப்பதும் ஒரு வகை வித்தையே!! - மனதோடு விளையாடு-6


       அமைதியான நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே நமது எண்ணங்களை ஒருவரின் மனதில் விதைக்க முடியும் என்பதற்கு " ஒத்துழைப்பு விளையாட்டை" முதலில் அந்த நபரிடம் விளையாடுங்கள்.

      ஆழ்மனதின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்துகொள்ளாமல் எந்த ஒரு நிலையிலும் உங்கள் வெற்றி தீர்மனிக்கப்பட மாட்டது. இந்த கலையை உங்கள் மனது தெரிந்தோ அல்லது தெரியாமலோ கற்றுக்கொண்டிருக்கிறது என்றால் உங்களின் வெற்றி அதிலே தான் ஒளிந்திருக்கிறது. உங்கள் மனதில் உள்ள அந்த மையப்புள்ளி எது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள வேண்டுமா?


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம். 

      மிகவும் நெரிசலான சாலையில் அந்த டாக்ஸி மட்டும் மிக வேகமாக பயணித்துக்கொண்டிருந்தது.

எதிரே செல்லும் வாகனங்களை மிக லாவகமாக அந்த டாக்ஸி முந்தி சென்று கொண்டிருந்தது. மில்லி மீட்டர் இடைவெளியில் பல விபத்துகளை தவிர்த்து அதன் ஓட்டுனர் தன் வேகத்தை அதிகப்படுத்தி சென்று கொண்டிருந்தார்.

டாக்ஸியின் ஒட்டுனருடன் சேர்த்து பின் இருக்கையில் இரண்டு பயணிகள் வெகு பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தனர்.

டாக்ஸி ஒவ்வொரு வலைவை எடுக்கும் போதும் அவர்கள் தங்கள் குலுங்களை பெரிதுபடுத்தாமல் கூர்மையாக சாலையையே வெரித்து பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அவர்கள் முகத்தில் அவசரமும் கூடவே பதற்றமும் தெரிந்தது. சன்னலில் வழியே ஒவ்வொரு வாகனமும் சர்,,சர்,,என்று பின்னுக்கு சென்றுகொண்டிருந்தது.


மிகப்பெரிய திருப்பத்தின் அருகே  வேகமாக அந்த டாக்ஸி சென்று கொண்டிருக்கும் போதே பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் திடீர்ரென்று ஓட்டுனரில் தோலை தட்டி,

" டிரைவர் லெப்டுல போப்பா" என்றார்.

அந்த நிமிடமே ஓட்டுனர் அலறி அடித்துக்கொண்டு தன் கட்டுப்பாட்டை இழந்தார்

பரபரப்பான சாலையில் அந்த டாக்ஸி தாரு மாறாக ஓட்டி, கடைசியில் ஒருவழியாக விபத்தை தவிர்த்து வண்டியை நிப்பாட்டினார்.  பயணிகளிடம் திரும்பிய அவர்

"சார்! இனி ஒரு தடவ இப்படி செஞ்சுடாதீங்க! நான் பயந்துட்டேன்" என்றார்

என்னப்பா சொல்றே? ஒரு தடவ லேசா தட்டுனதுக்கே இப்படி பயப்படுற ?

அதற்கு அந்த ஓட்டுனர் சொன்னார்,,

          "உங்க பேருல தப்பு இல்லைங்க, நான் இன்னைக்கு தான் வேலையில சேர்ந்தேன், இதுக்கு முன்னாடி 15 வருசமா பிணம் எடுத்துட்டு போற மார்ச்சுவரி வேன்ல டிரைவரா இருந்தேன்".

   இப்படித்தான் மூளையின் நியூரான்களின் எலக்ரோ வேலை செய்துகொண்டிருக்கிறது, ஆழ்மனதோடு சம்பந்தப்படுத்தி... அதற்கு முன்
உங்க மனசு கிட்ட இப்படி சில கேள்வியை கேட்டு முதலில் உங்களை  பரிசோதனை பண்ணி பயிற்சி செய்து கொள்ளுங்களேன்.

  • சாதரணமான வேகத்தில் ( 30கி.மீ ) உங்களால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பெரிய வளைவுகளை சாய்வான கோணத்தில் வளைக்க முடியுமா? ஆனால் 160 கி.மீ அதிவேகத்தில் செல்லம் போது ஒரு விளையாட்டு வீரரால் எப்படி லாவகமாக சாய்ந்து கடக்க முடிகிறது?
  • எப்படி நான்கடி உயரத்திற்கு மேலாக தேனீரை உயர்த்தி ஒரு தேனீர் கடைக்காரரால் சிந்தாமால்  டம்ளரில் ஆற்றித் தர முடிகிறது?
இப்படி, இன்னும் அதிகமான பல கேள்விகளை உங்களால் உருவாக்க முடியும். அனைத்துமே பழக்கத்தோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது என்பதே விடையாக இருக்கும்.

ஆக, நம் மனதில் பதிந்துள்ள விசயங்களுக்கு சரியான பயிற்சியை தினமும் கொடுக்க வேண்டுமானால் அதனை பழக்கமாக உருவாக்கிக்கொள்ளுங்கள்.

       மேற்கண்ட டாக்ஸி கதையில், ஓட்டுனர் தன் மனதை ஒருநிலையில் வைத்திருந்ததால் அவரால் வேகமாக மில்லி மீட்டர் இடைவெளியில் விபத்துகளை தவிர்க்க முடிந்தது.  ஆனால், திடிரென்று ஏற்பட்ட அதிர்வால் அவர் மனம் கலைக்கப்பட்டு அவரின் நிலைப்பு தன்மை மாற்றமடைந்து விபத்தை சந்திக்கும் நிலைக்கு ஆளாக நேரிட்டது அல்லவா?

இந்த யுக்தியைத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள போகின்றீர்கள். ஆரம்பகட்ட பயிற்சியில், ஒருவரின் மனதில் பதிந்துள்ள விசயங்களை தெளிவாக உங்களால் உணர்ந்துகொள்ள முடிந்தால் மட்டுமே அவரின் ஆழ்மனதில் உங்கள் எண்ணங்களை விதைக்க முடியும். அதற்கு "ஒத்துழைக்கும் விளையாட்டை" விளையாடுங்கள்

ஒத்துழைக்கும் விளையாட்டு : 

ஒருவருடன் பேசும் பொழுது அவரின் பார்வையை நேரடியாக பார்ப்பதையே பெரும்பாலான மார்க்கெட்டிங் பயிற்சிகள் சொல்கின்றன. ஆனால் அவரின் கண்களில்  நிலைப்பு தன்மை இருக்கும்பட்டசத்தில் உங்களால் உங்கள் எண்ணங்களை அவரின் மனதில் விதைக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா?

இரண்டு செயல்கள் 
  • நமது எண்ணத்தை விதைப்பது - ஒத்துழைக்கும் விளையாட்டு
  • அவரின் எண்ணத்தை தெரிந்துகொள்வது - குட்டையை குலப்புவது
முதலில் ஒத்துழைக்கும் விளையாட்டை பற்றி தெரிந்து கொண்டிருக்கின்றிர்கள்

சென்ற பதிவில் ஸ்காட்லாண்ட் காவலர்களின் விசாரனை முறையின் போது ஒருவரின் மனதை அமைதிபடுத்தி அதன் மூலம் உண்மையை தெரிந்துகொள்வார்கள் என்ற கூற்று ஞாபகம் வருகிறதா? 

அப்படி ஒருவரை அமைதி படுத்த நீங்கள் விரும்பும் பசத்தில் அவரின் மனநிலையை நீங்கள் மாற்ற வேண்டும்.

அவரிடம் பேச்சு கொடுங்கள் அல்லது அவரை பேசும்படி தூண்டுங்கள். இரண்டையும் செய்யலாம்.

அவரின் பார்வையில் உள்ள நிலைப்பு தன்மையானது அவர் நிலைப்பு தன்மையில் இருப்பதாக காட்டுமே தவிர, உண்மையில் அவர் ஒரு செயலில் தீவிரமாக இருக்கின்றார் என்றே அர்த்தப்படுத்துகின்றது. அதாவது, அந்த டாக்ஸி டிரைவரை போல இவரின் கவனம் முழுவதும் ஒரே சிந்தனையில் இருக்கிறது. அதை நீங்கள் கலைக்க துவங்குங்கள்.அவரின் மன ஓட்டத்தை மாற்றும் பொழுதான் உங்கள் எண்ணங்கள் அங்கே பதிவேற்றம் பெறும். 

குறிக்க : இந்த இடத்தில் அவரின்  எண்ணம் எதைப்பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறது என்பதை ஆராய்வதில் நமக்கு கவனம் தேவையில்லை. எதைப்பற்றியாக இருந்தாலும் அவர் முதலில் அங்கிருந்து கலைந்து வர வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்

பேச்சு கொடுங்கள் :

அவரிடம் மெதுவாக பேச்சுகொடுங்கள்,  அவருக்கு பிடித்த விசயங்களை அவராகவே சொல்லும்படியான பொதுவான ஜாதகபலன்களை சொல்லுங்கள். 

"நீங்க கொடுத்த தேனீர் அருமையாக இருக்கிறது அதில் சுகர் ஃப்ரி தானே கலந்திருக்கிறீர்கள்?" 

என்றவாறான பொதுவான கருத்தை அவருடன் ஒன்றி பேச துவங்கும் பொழுது அவருக்கு பக்கத்தில் நீங்கள் செல்ல துவங்குவீர்கள்.

        உங்களுக்கு தெரிந்த அனைத்து செய்திகளும் அவருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை, அதே போலவே தான் உங்களுக்கும். இருவருக்குமான பொதுவான விசயங்கள் என்று ஒன்று அந்த அறையிலேயே ஒளிந்திருக்கவும் வாய்ப்புள்ளது. அதை முதலில் நீங்கள் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

கிடைக்கவில்லையா? 

கவலையையே வேண்டாம்!!

"முதலில் குட்டையை குழப்புவோம் பிறகு மீன் பிடிப்போம்!"

2 comments:

  1. +++---........? நன்று.(குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவன்)

    ReplyDelete
  2. உங்கள் விளையாட்டு மிகவும் அருமை.குழப்பத்தில் தானே நல்ல தீர்வு கிடைக்கும்.

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.