தொழிற்களம் சிறப்பு ஆலோசனை கூட்டம்

     நேற்றைய தினம் தொழிற்களம் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் உள்ளூரில் (திருப்பூர்)உள்ள சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம். டிசம்பர் மாத இறுதியில் தொழிற்களம் சார்பில் நடக்கவிருக்கும் விழா குறித்து திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கலந்தாய்வின் போது ஜான் சாமுவேல், வீடு.சுரேஷ், ஜோதிஜி,மோகன் சஞ்சீவன், மக்கள் சந்தை சீனிவாசன்

   வெளியூரில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் இதுபற்றிய விபர குறிப்பை தெரியப்படுத்தியிருந்தோம். தோழர் மதுமதி, திண்டுக்கல் தனபாலன், ராஜபாட்டை ராஜா, மழைச்சாரல் கதிர், விண்முகில் தமிழ்செல்வி, திடம்கொண்டு போரடாடு சீனு போன்றோரும் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். மற்ற தொழிற்களம் உறுப்பினர்கள் மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டார்கள்.

அனைவருமே தொழிற்களத்தின் விழாவா? எப்போ? என்று ஆவலுடன் கேட்பதே நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது. 

ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற சுவாரசியங்கள் :

    இணைத்தின் வழி தமிழ் உறவினர்கள் சங்கமம் என்றாலே மிகுந்த உற்சாகத்தை கொடுக்க கூடிய  நிகழ்வாகத்தான் இருக்கும். அவ்வழியே நேற்றைய உரையாடல்களில் தகவல்கள், ஆச்சர்யங்கள், ஆதங்கங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர். 

மனித மூளையின் எலக்ட்ரான்கள் செய்யும் மரபனு மாற்றங்களை பற்றி தமிழினி அவர்கள் சிறப்பாக சொன்னார்..மேலும் சாலை விபத்துகளை தவிர்க்க விளிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் கோரிக்கையை முன்வைத்தார்.

அறிவியல் பதிவுகள் மற்றும் அதை பற்றிய விளிப்புணர்வை மோகன் சஞ்சீவன் அவர்களும், வழக்கம் போல் ஜோதிஜி அண்ணாவின் மேலாண்மை சிந்தனைகளையும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கலந்தாலோசனை சென்றதை சுவாரசியப்படுத்தின.

நாஞ்சில்மதி திருமதி.மல்லிகா சம்பத் அவர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் உணர்வையும், பகுத்தறிவு சிந்தனையையும் கொண்டு வருவதில் பெற்றோர்களுக்கு மிக முக்கியப்பங்கு இருப்பதையும், அதற்கு வழிமொழிய ஆசிரியர்கள் தயாராய் இருக்க வேண்டும் என்பதை குறித்தும் சொன்னார்கள்

தகவலுடன் சுவாரசியமும்  கலந்த கருத்துகளை மக்கள்சந்தை நிறுவனர் திரு. சீனிவாசன் அய்யா அவர்கள் கொடுத்தார். அதன்படி, தமிழர்களாகியவர்கள் உலகம் முழுவதும் பொருள் தேடி சென்றாலும் அவர்களின் தாய் மண்ணை என்றும் மறப்பதும் இல்லை. பொருள் ஈட்டும் கலையில் தேர்வுறாத எந்த சிந்தனையும் தோற்றுப்போகும் அபாயம் உள்ளது. எனவே தமிழர்கள் வியாபாரத்திலும் கெட்டிக்காரர்களாக வர வேண்டும். பல வியாபார சிந்தனைகளுக்கு வடிவங்களை கொடுத்து பரிசோதித்து வெற்றி பெற துணிச்சலுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அனைவரும் 

தமிழ்செடியின் சார்பில் வீடு.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டார். மருத்துவத்தின் மகத்துவம் குறித்தும் இயற்கையை புறந்தள்ளினால் ஏற்படும் அபாயங்களை குறித்தும் இன்னும் போதுமான விளிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல நம்மை நாம் தயார்படுத்திகொள்ள வேண்டும் என்று தனது கருத்தை முன்வைத்தார்

       ஜான் சாமுவேல் அவர்கள் தான் ஒரு அரசு அதிகாரியாக இருந்தாலும் பல நடைமுறை நிகழ்வுகளை சுவாரசியாக முவைத்து பேசினார். அதன்படி ஊழலற்ற சமூகம் மலர்வதற்கு அரசை குற்றம் சொல்வதை காட்டிலும் தனி மனித ஒழுங்கை கடைபிடிக்க ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றார். அதை வழக்கறிஞரான நண்பர் சபரிகீதனும் முன்வைத்தார். மற்றும் அங்குராசு, கோபால், ரேவதி ஜானகிராமன், பிரியா போன்றோரும் மாணவர்களிடம் நம் எண்ணங்களை கொண்டு சேர்க்க தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.

இணைய பயன்பாட்டின் மூலம் இணைந்த நம் உறவுகளை போல இந்த கலந்தாலோசனைக்கு வரமுடியாத அனைத்து நண்பர்களுக்கும் உடனடியாக கருத்துகளை பறிமாறிக்கொள்ள குழு மின்னஞ்சலை முறையாக பயன்படுத்த கேட்டுகொள்ளப்பட்டது.

தொழிற்களம் நண்பர்களுடன்
அதன்படி, தமிழ்செடி வரும் டிசம்பர் 9, 2012 ஞாயிறு அன்று  கெளரவ விழா ஒன்றை தொழிற்களம் அலுவலத்தில்  நடத்துவது குறித்து ஆலோசனை செய்தோம். 

Comments

 1. ஒரு இலங்கை சிங்கத்தை விட்டு விட்டு ஒரு சந்திப்பா நடத்துங்கள்.. இலங்கை, இந்தியா ரெண்டு கோர்டிலையும் கேஸ் போட்டுரேன்

  ReplyDelete
 2. காட்டு ராஜாவுக்கு கட் அவுட்டா? யாரங்கே அரியணையனையை உடனே தயார்படுத்துங்கள்,,,

  ReplyDelete
 3. சிறப்பாக வந்துள்ளது. புகைப்படங்கள் குறித்த விசயத்தில் இன்னமும் கவனம் செலுத்த வேண்டும். உற்றுப் பார்த்து கண்டுபிடித்து கண்கள் வலிக்கின்றது.

  ReplyDelete
 4. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள், என்னலாம் கூப்பட மாட்டீகளா ... ஹ்ம்ம்ம்.....

  ReplyDelete
 5. செழியா!! மின்னஞ்சலில் நமது உறவுகள் அனைவருக்குமே தெரிவித்திருந்தோமே!!


  இது ஆலோசனை கூட்டம் மட்டும் தான்.. அலைபேசியில் அழைக்கிறேன்..

  ReplyDelete
 6. மன்னிக்க , தங்கள் மின் அஞ்சல் ஸ்பாம் பகுதியில் இருந்தது , கவனிக்க வில்லை . இருந்தாலும் சும்மா தான் அப்டி கேட்டேன கோவப்படாதீங்க

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்