Ads Top

டிசம்பர் 9, தமிழ்செடி விருது தொழிற்களத்தில் இனிதே நடந்து முடிந்தது

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய வணக்கம்....

மக்கள்சந்தை இணையம் நிறுவனர் ஈ.சீனிவாசன்

இன்று காலை 10.00 மணி அளவில் நமது மக்கள் சந்தை இணையத்தின் நிறுவனர் திரு.ஈ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் வலைத்தள எழுத்தாளர் என நா.மணிவண்ணன் அவர்களை பாராட்டி, கௌரவ தமிழ்ச்செடி விருது வழங்கப்பட்டது, தொழிற்களத்தின் பல விதைகள் இந்த விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  

தொழிற்களம் முதன்மை நிர்வாக இயக்குனர் அருணேஸ்
மக்கள் சந்தை சீனிவாசன் - சுப்பிர பாரதி மணியன்


நினைவு புத்தகம் வழங்கியபோது


ஜோதிஜி - நா.மணிவண்ணன்
அனைத்து மாவட்டங்களிலிருந்து தொழற்களம் குழு உறுப்பினர்கள் மின்னஞ்சல் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களை மணிவண்ணன் அவர்களுக்கு தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து,,

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது, மொத்த நிகழ்வையும் தொழிற்களம் நிர்வாக இயக்குனர் திரு.அருணேஸ் வரவேற்புரையுடன் தொகுத்து வழங்கினார். 

கெளரவ விருந்தினராக சிறுகதை நாவல் எழுத்தாளர் திருப்பூர்.சுப்பிர பாரதி மணியன் அவர்கள் கலந்துகொன்டு தன் அனுபவத்தையும் இணையத்தின் வளர்ச்சியையும் குறித்து பேசினார்.

மெட்ராஸ் பவன் சிவக்குமார் பேசிய போது...
சிறப்பு  விருந்தினர்களாக மெட்ராஸ் பவன் சிவக்குமார், கோவை மு.சரளா, கோவை நேரம் ஜீவா, தோத்தவன்டா. ஆரூர் மூனா, நிகழ்காலம் சிவா, உலக சினிமா ரசிகன் பாஸ்கரன், போன்றோரும் கலந்துகொண்டனர்.

நா.மணிவண்ணனை பாராட்டி வீடு. சுரேஸ், இரவு வானம் சுரேஸ் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக திருப்பூர் ஜோதிஜி அவர்களின் உரை இருந்தது.

ஒவ்வொருவரும் தங்கள் இணையத்தில் பயணித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் (பார்க்க காணொளி (விரைவில்) )

முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில்...

கோவை மு சரளா, பார்க்கத்தான் நான் அமைதி என்று மிக அற்புதமாக தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

மெட்ராஸ் பவன் சிவக்குமார் எதார்த்த வாழ்வும் தமிழ் வளர்ச்சியும் குறித்து மிக அழகாக  பேசி அனைவரின் கைதட்டல்களையும் தனக்குறிதாக்கினார்.

ஆரூர் மூன பிரம்மாண்ட உரையை இரு வரியிலும், அதை விட அற்புதமாக் ஒரே வரியில் கோவை நேரம் ஜீவாவும் தன் அனுபவத்தை பகிர்ந்தனர்.

நிகழ்காலம் சிவா தனி மனிதன் தன் ஒழுக்கத்தை பற்றி சிந்தித்தாலே போட்தும் நாட்டில் அற்புதமான மாற்றங்கள் உருவாகிடும் என்ற தன் கருத்தை தொகுத்தளித்தார்.

நான் உலக சினிமாவை கரைத்து குடித்தவன் என்பதை அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பாஸ்கரன் நிருபித்து பேசினார்.

விழாவின் முக்கிய நோக்கமே புதிய பதிவர்களை உற்சாக படுத்துவதுடன் பலருக்கும் வலையுலகை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே,,,

நம் பதிவர்களின் அனுபங்களால் நாமும் புதிதாக எழுத வேண்டும் ஏன்ற ஆர்வத்தின் காரணமாக ஆசிரியை விஜியலட்சுமி யோகானந்தன் தங்கள் நன்றியை தெரிவித்தனர் உடன் மாணவர்களும் கலந்துகொண்டனர், ரேவதி ஜானகிராமன், பிரியா போன்ற தொழிற்களம் செயல் உறுப்பினர்களும்  பங்கேற்றனர்.

பேஸ்புக் நண்பர்கள் அங்குராஜ், கோபாலகிருஸ்ணன், ஆறுமுகம் போன்றோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

சமூக ஆவலர்களான திருப்பூர் லோக்சதா நண்பர் கார்திக், மற்றும் எழுச்சி சிந்தனை மிக்க நண்பர் சரவணன் அவர்களும் கலந்துகொண்டனர்.தொலைபேசியில் கூப்பிட்ட நம்ம தொழிற்களம் பதிவர்கள்  டிசம்பர் 30 விழாவை சிறப்பாக நடத்த இந்த விழா முன்மாதிரியாக இருந்தது என்றும் மேலும் தொழிற்களத்தின் டிசம்பர் 30 விழா சிறப்பாக நடைபெற தங்களது ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

ரஞ்சனி நாரயணன், சித்தூர் முருகேசன், ராஜபாட்டை ராஜா, கண்மணி  அன்போடு, மோகன் சஞ்சீவன், மழைக்காலம் கதிர் ராத் போன்றோன்றோரும் தொழிற்களம் விழாவை சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

பிரபல பதிவர்கள் சீனு, செழியன்,  விஜயன் தங்கள் பங்களிப்பு பற்றி ஆர்வமுடன் கேட்டனர்.

மொத்த நிகழ்வையும் காணொளியில் தொகுத்து விரைவில் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து பயணிப்போம்!!
டிசம்பர் 30ல் சந்திப்போம்.!!!

17 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் தொழிற் களத்துக்கும், மணிவண்ணனுக்கும்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மக்களே :-)))
  தூள் கிளப்புங்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல!!

  தொடர்ந்து இணைந்திருப்போம்,,,,,

  ReplyDelete
 7. தொழிற்களம் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கவியாழி கண்ணதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி!!

  தொடர்ந்து தொழிற்களத்திற்கு வருகை புரிந்து குறை நிறைகளை நமது பதிவர்களுக்கு தெரீவியுங்கள்....

  நன்றி!!

  ReplyDelete
 9. நான் வராமல் போய்விட்டேனே, முப்பதாம் தேதி எப்படியும் வந்துவிடுவேன் நானும் :)

  கண்ம"ணி" அன்போடு

  தட்டச்சுப் பிழை, சரி செய்துவிடுங்கள்.

  என்னுடைய பெயரெல்லாம் பதிவில் இணைத்திருக்கிறீர்கள் :) ஒரே சந்தோஷம் எனக்கு :) :D

  ReplyDelete
 10. இனியதொரு பதிவர் சந்திப்பாக இருந்தது. கருத்து பரிமாற்றங்களும் தொய்வின்றி இருந்தன... பாராட்டுகள் குழுவினருக்கு..:)

  ReplyDelete
 11. என்னுடைய பெயரெல்லாம் பதிவில் இணைத்திருக்கிறீர்கள் :) ஒரே சந்தோஷம் எனக்கு :) :D

  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. எழுத்து நடையை பார்த்தேன். படித்தேன். பட்டாசு கௌப்புறீங்க.

  அருண் உங்களுக்கும் திரு சீனிவாசன் அவர்களுக்கும் தேவியர் இல்லத்தின் மற்றும் தமிழ்ச்செடி சார்பான நன்றிகளை தெரிவத்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 12. "பிரபல பதிவர் செழியன் " அப்படின்னு சொல்லிடீங்களே, ஐயோ, இன்றைக்கு எனக்கு தூக்கம் வராதே .... விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. மகிழ்ச்சி.. மணிவண்ணனுக்கு எனது வாழ்த்துகள்..

  ReplyDelete
 14. விழா செய்தியை படித்தவுடன், என்னால கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் கொஞ்சம் மறைந்தது. காணொளிக்காகக் காத்திருக்கிறேன். பரிசு பெற்ற திரு மணிவண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
  பிரபல பதிவர்கள் திருவாளர்கள் செழியன், சீனு, விஜயன் ஆகியோருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
  செழியன், நாளையும் தூங்க மாட்டீர்களா?

  ReplyDelete
 15. சொல்ல மறந்துட்டேன், என் பெயரையும் விழா நிகழ்வில் போட்டதற்கு நன்றிகள் பல பல.
  மறந்ததற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 16. மகிழ்ச்சி...............

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.