தூக்கி எறியக் கூடிய காகித யூ எஸ் பீ செலுத்தி(USB drive)!

யூ எஸ் பீ  செலுத்தி(USB drive) என்பது ஒரு தற்காலிக நினைவகம், கணினியில் இருந்து தகவல்களை எடுத்துக் கொள்ளவும் , கணினிக்குள் தகவலை ஏற்றிக் கொள்ளவும் உதவும். இது அநேகமாக ஒரு பிளாஸ்டிக்கின் உள் நினைவக  மின் சுற்று பாதை சிப்  பொருத்தப் பட்ட கைக்கடக்கமான கருவி . சட்டை பையில் கூட வைத்துக் கொள்ளும்படி சிறிய அளவில் கூட வந்துள்ளது. இதுவே காகிதத்தில் செய்யப் பட்டு உபயோகித்த பின் கசக்கித் தூக்கி எறியும் படி வந்துள்ளது.

With an embedded silicon chip, intelliPaper turns an ordinary strip of paper into a workin...


 
மேல் படத்தில் இந்த காகித செலுத்தியும் கீழ் படத்தில் இப்போது நாம் உபயோகப் படுத்தும் செலுத்தியும் கொடுக்கப் பட்டுள்ளன.
 
இன்டெலி பேப்பர்(intelli paper) என்ற பெயருள்ள மெல்லிய தபால் அட்டை கனமுள்ள இந்த காகித யூ எஸ் பீ  செலுத்தி யின் உள் ஒரு சிப் பொருத்தப் பட்டுள்ளது . இதில் தகவல் ஏற்ற ஒரு வாசிப்பியும் மென்பொருளும் தேவை . இதை  தயாரிப்பு நிறுவனமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது 

Once it's ripped from the full sheet and folded in half, the paper can be inserted into an...

நிறுவன விளக்கங்கள் ,வர்த்தக அட்டைகள் , திருமண அழைப்பிதழ்கள் இவற்றையெல்லாம் இலக்க வடிவில் இந்த அட்டையில் ஏற்றி வேண்டியவர்களுக்கு தபாலுடன் இணைத்து அனுப்பலாம்

இது தொழிற் களத்தில் எனது 200 ஆவது பதிவு. இந்த செலுத்தி செய்தி மூலமாக உங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிக்கவும் வந்துள்ளது. அனைவருக்கும் எனது இனிய 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

Comments

 1. இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், மோகன்!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. இது தொழிற் களத்தில் எனது 200 ஆவது பதிவு. இந்த செலுத்தி செய்தி மூலமாக உங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிக்கவும் வந்துள்ளது. அனைவருக்கும் எனது இனிய 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுகளும் வாழ்த்துக்களும் இருநூறாவது படைப்பிற்கு மேலும் சிறப்பாக இவைகள் தொடரட்டும் !......

  ReplyDelete
 3. அன்பின் மோகன் சஞ்சீவன்

  இணையத்தில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் - இணையம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. காகித செலுத்தி பற்றிய தகவல் நன்று - நன்றி - இருநூறுக்கும் இனிய புத்தாண்டிற்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்