கிறிஸ்துமஸ் (தாத்தாவிற்கு) வாழ்த்துக்கள்


*எனது அன்பு கிறிஸ்துமஸ் தாத்தாவே
 உன்னை வர்ணிக்கிறேன் உற்றுக் கேள்

* குல விளக்கின் குற்றமற்ற குருதித் துளிகளின்
   கோர்வைதான் உனது "சிகப்பு மேலாடை"

* நீ உயர்ந்த முத்தாய், உச்சியிலிருந்தாலும்
   அடங்கி வாழ் என்று அடிபணிகின்றதோ
   உனது "தலைக் குல்லா"

* அட1 குல்லாவிலும் குன்றிலிட்ட விளக்காய்
   இயேசுவின் "திரு மொழி"!

* இறந்தோரையும் எழுப்பச் செய்யும்
   இறையானவரின்   இரக்கமிகு பார்வையே,
   உன் "இரு விழிகள்"* ரோஜா இதழ் போன்ற இறைவனின்
   "மெ(மே)ன்மை உன் நிறமே...!

* பசும்பாலும் தோற்றுப் போகும் வெண்மையில்,
   அவர் வெண்மன மகிமையில்,
   வெண்மனமே உனக்கு "வெண் தாடியாய்"

* அளவற்ற உணவால் அபரிதமாய்
   பெருக்கும் வயிற்றைப் போல்-அல்லாமல்
   அளவில்லா ஆசையை அடக்கி விடு
   என்கிறதோ உனது "அரைக்கச்சு"

* ஆ..!இடையிலும் இறைமொழி...ப்ச்...
 
* மனக் கசட்டை கரியாக்கு என்ற வசனம் தான்
   உன் "காலனியின் கருமை வர்ணக் காரணமோ...!

* ஐயோ,மறந்து விட்டேனே "பரிசுமூட்டையை....
   பரிசு மூட்டை அல்ல, அது-
   பண்பான திருமொழிகளின் "பகுத்தறிவு பெட்டகம்"

* நீ குழந்தைகட்கு கொடுப்பது
  பரிசுப் பொருட்கள் அல்ல-
  "நீதி மொழிகள்"

* "அன்பின் அடிமை நான்" என்ற மொழிகள்-தாம்
   உன் "கூன் விழுந்த நடை"யின் அழகு ரகசியமோ!

* சேற்றில் மலர்ந்த செந்தாமரைப் போல்
   உன் திருமுகத்தில் "புன்னகை"
   ஆவியானவர் எங்களுக்கு அளித்த "பொன்நகை"

* நான் உன்னிடம் விண்ணப்பிக்கிறேன்=
   இறைவனிடம் கொடுப்பாயா ?

* "கேள் மகனே"

* காற்றில் கரையும் கற்பூரம் போலே,
   இறையில் கரைந்துவிடும் உள்ளம் தா-
   எனக்கு அல்ல எங்களுக்கு ....
  "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்" உங்களுக்கு.....

-செழியன் 

Comments

  1. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்