உன் வாழ்க்கை உன் கையில்....மார்ச் 2013 இல்    10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்குத்  தயாராகிக் கொண்டிருக்கும்  மாணவ மாணவியர் படித்து   பயன்பெற சில ஆலோசனைகளை இங்கு பதிவு செய்கிறேன். 


   முப்பதுநாற்பது வருடங்களுக்குமுன்பிருந்த கல்விமுறைதேர்வுமுறைபெற்றோர்நிலைஇன்று இல்லைமதிப்பெண்ணிற்கு நாம் கொடுக்கும்முக்கியத்துவம் அன்று இல்லை. 10, 12 ஆம் வகுப்புபொதுத்தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் என்றநிலைதான் அதிக வீடுகளில்அதுவும் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்று விட்டால் ஊரே கொண்டாடும்ஆனால்இன்று தேர்ச்சி என்பதோமுதல் வகுப்பு மதிப்பெண் என்பதோ ஒருமதிப்பெண்ணாகக் கருதப்படுவதில்லைஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்அல்லது மகள் மாநிலத்தில்  முதலிடம்  அல்லது மாவட்டத்தில்  முதலிடம்அதுவும் இல்லாவிட்டால் பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் ன்று எதிர்பார்க்கின்றனர்அதற்கான முயற்சியாக காலையில் கணக்குடியூசன்மாலையில் ஆங்கில டியூசன், பகல் முழுவதும் பள்ளி  எனசளைக்காமல் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.மொத்தத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொன் முட்டையிடும் வாத்து போலமதிப்பெண் பெறும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர்

        சில வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மதிப்பெண்ணிற்காகநடக்கும் பேரம் வேடிக்கையான ஒன்று. காலாண்டுத்தேர்வில் வகுப்பில் முதல்ஐந்து இடங்களுக்குள் வரவேண்டும் அல்லது 400/500க்கு மேல் மதிப்பெண்வாங்கினால், • புதிய ஆடை
 • ஒரு நாள் தீம்பார்க் பிக்னிக்
 • ஒரு நாள் முழுவதும் பிடித்த டி.வி நிகழ்ச்சி பார்த்தல்
 • புது சினிமா+இரவு ஓட்டல் டிபன்

            என தேர்வில் கேட்பது போலவே வீட்டிலும் கேள்வி பதில் கேட்கப்படுகிறது.
இப்படியே அரையாண்டுத்தேர்வுதிருப்புதல் தேர்வு என ஒவ்வொரு தேர்விற்கும்மதிப்பெண்பரிசுப்பொருளின் மதிப்பு கூடிக்கொண்டேப் போகும்இறுதியாகப்பொதுத்தேர்வில் வாங்கப்போகும் மதிப்பெண்ணிற்காக மாணவர்களுக்குசுற்றுலா,  பைக்கார் எனவும் மாணவிகளுக்கு தங்க மோதிரம்வளையல்செயின்எனவும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மிகப்பெரிய பேரம்நடக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்.மதிப்பெண் பெற வைக்கிறேன்எனக்கு என்ன கமிஷன்மோதிரமாகம்மலா?வளையலாஎன கறாராய் கமிஷன் பேசும் இடைத்தரகர்களாய் அம்மாக்கள்  பலர்.

  மதிப்பெண்களே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக ஆகிவிட்டஇந்த காலக்கட்டத்தில்      குழந்தைகளைப் படிக்க வைப்பதில்பெற்றோருக்கு  இருக்கும் இந்த ஆர்வத்தையும் அக்கரையையும் நாம்  குறைசொல்ல முடியாதுகல்லூரி வளாகத் தேர்வாகட்டும்வேலைக்கான தேர்வாகட்டும்பத்தாம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரையான மதிப்பெண்கள் கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறதுஎனவே மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும் என்றகட்டாயத்தில் மாணவர்களும் மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்றகடமையில் பெற்றோர்களும் உள்ளனர்.


        ஆசிரியர் வழிநடத்தபெற்றோரின் துணையுடன் மாணவர்களின் முயற்சியும் இருந்தால்தான் மதிப்பெண் என்ற வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க முடியும்.

பெற்றோரின் ஊக்கம்:
         * குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை அவர்கள் நண்பர்களின்பக்கத்து வீட்டுகுழந்தைகளின் மதிப்பெண்களுடன் ஒப்பிடாதீர்கள்இன்றைய குழந்தைகள்அதனை விரும்புவதில்லைஇதைவிட அதிக மதிப்பெண் பெற உன்னால் முடியும்.மற்றவர்களை விட உன்னிடம் அதிக திறமை உள்ளது என்று நேர்மறையாகப் பேசிஊக்கப்படுத்த வேண்டும்.

         * படி படி என நாள் முழுவதும் விரட்டாதீர்கள்ஒரு மாணவனால் ஒருவிசயத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரம் மட்டுமே கவனம் செலுத்த முடியும்.அதன்பின் அவர்களை அறியாமலேயே கவனம் சிதறத் துவங்கும்எனவே ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள்இந்த ஓய்வைஅவர்கள் விருப்பப்படி செலவிட அனுமதியுங்கள்சிலர் தொலைக்காட்சிபார்க்கலாம்பந்துசெஸ்கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடவிரும்பலாம்பொதுஅறிவுஅறிவியல் சார்ந்த புத்தகங்களைப் படிக்கலாம்.சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவுடன் அரட்டை அடிக்கலாம், காய்நறுக்கிக் கொடுக்கலாம்அவர்கள் விருப்பப்படி விட்டு விடுங்கள். 10நிமிடங்களுக்குப்பின் புதிய உத்வேகத்துடன் படிப்பார்கள்.

                        *குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சிபார்க்க வேண்டாம்.  ஒரு வருடத்திற்கு சீரியல்களை மறந்து விடவேண்டியதுதான்தனி அறையில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் கவனம்சிதறும் வாய்புண்டு.

                         *முடிந்தவரை அவர்கள் உங்கள் கண்பார்வையில் இருக்குமாறுபார்த்துக் கொள்ளவேண்டும்அவர்களுடன் அமர்ந்து புத்தகம் படிக்கலாம்அல்லதுஅவர்கள் விடைகளை எழுதிப் பார்ப்பதற்கு வசதியாக வினாக்கள் எழுதித்தரலாம்.எழுதிய விடைகளை திருத்தித் தரலாம்.

                           *  குழந்தைகளின் நிறை குறைகளை அதிகம் அறிந்தவர்கள்ஆசிரியர்கள்தான்பெற்றோர் ஆசிரியர்களை அடிக்கடி சந்தித்தாலேவிளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

 ஆசிரியரின் தூண்டுதல்:
                                                   
                  * எந்தகுழந்தையையும் எதிர்மறை விமர்சனம் செய்யாமல் அவர்கள்திறனறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

                 * ஒவ்வொரு வகுப்பிலும் கற்பூரம் போன்ற மாணவர்களும்கரித்துண்டுபோன்ற மாணவர்களும்வாழைமட்டை போன்ற மாணவர்களும் இருப்பார்கள்.அவர்களின் தகுதியறிந்து படிக்க வைப்பதில் தான் ஆசிரியரின் வெற்றிஅடங்கியுள்ளது.

                 * விடைகளை வாய்விட்டு சொல்ல வைத்தலும்சிறு தேர்வுகள்நடத்துதலும் திருப்புதலில் மிகமிக அவசியம்.

                 *பாடத்திட்டத்தை நன்கு அறிந்து அதிக மதிப்பெண் பெறக்கூடியபாடங்களை திரும்ப திரும்ப எழுதிப் பார்க்க வைக்கவேண்டும்.

மாணவர்களின் முயற்சி:

                 *தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்ஒவ்வொரு பாடத்திற்கும்எவ்வளவு நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்பதை முதலில் திட்டமிடவேண்டும்திட்டப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து முடிக்கவேண்டும்.
                    * நாள் வாரியாகபாடவாரியாக அட்டவணை தயார் செய்யவேண்டும்.எளிதான பாடத்திற்கு குறைந்த நேரமும் கடினமான பாடத்திற்கு அதிக நேரமும்ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

                    * எந்த பாடப்பகுதிக்கு எத்தனை மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப படிக்கவேண்டும்.

                    *ஒரு முறை எழுதுவது ஏழு முறை படித்ததற்கு சமம் என்பார்கள்.தினமும் படித்தவற்றை எழுதிப்பார்த்து மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.

                    * சுவரிருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்சத்தான உணவுகளைஉண்டு உடல்நிலையையும் சீராக வைத்துக் கொள்ளவேண்டும்.
                                                    
                     * காற்றோட்டமான அறையில் அமர்ந்து படியுங்கள்.

                     *தேர்வு முடியும் வரை விடுப்புஎடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

                      *ஆசிரியர் தரும் குறிப்புகளைபயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

                      * 100 மதிப்பெண்கள் எதிர்பார்க்கும்மாணவர்கள் வினாக்களுக்குரிய விடைகளைப்படிப்பதுடன் பாடப்பகுதி முழுவதையும் திரும்பத்திரும்ப மனதில் பதியும்படி பலமுறை வாசிக்கவேண்டும்.


                             மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் போதும்,வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லும் போதும் மாணவர்களை விடஅதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் வழிகாட்டிய ஆசிரியர்களும் , துணைநின்றபெற்றோர்களும்தான்எனவே அவர்கள் கூறும் அறிவுரைகளை  அறுவை எநினைக்காமல் இனி வரும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மதிப்பெண்ணாகமாற்றும் முயற்சியை மேற்கொண்டால்,

''மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை                       என்நோற்றான் கொல்எனும் சொல்''

    என்று மகனுக்கு வள்ளுவர் சொன்ன இலக்கணத்தை நிஜமாக்கிக் காட்டலாம்.

  நினைவிருக்கட்டும்;
 
                    உன் வாழ்க்கை உன் கையில், 
         உன் மதிப்பெண் உன் முயற்சியில்.


வாழ்த்துக்களுடன்

நாஞ்சில் மதிComments

 1. ஒரு நல்ல தலைமை ஆசிரியரின் எழுத்து நடை நிச்சயம் மகிழ்வை தருகிறது..

  தொடருங்கள் நாஞ்சிம் மதி அம்மா..

  ReplyDelete
 2. //உன் வாழ்க்கை உன் கையில்,
  உன் மதிப்பெண் உன் முயற்சியில்.//,

  நல்ல பதிவு, வேண்டிய பதிவு

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்