வெந்தயக்கீரை சூப் - மருத்துவப் பயன்கள்:

வெந்தயக்கீரை சூப்


தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சோள மாவு – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெண்ணெய் – சிறிதளவு
காய்ச்சிய பால் – 1/2 டம்ளர்
மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும். நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும். காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சோக்கவேண்டும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும். உப்பு, மிளகுப்பொடி தேவையான சேர்க்கவேண்டும். இப்பொழுது சுவையான சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.
சிறிதளவு சோளத்தை அரைத்து அந்த சூப்பில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.
 மருத்துவப் பயன்கள்

வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி உயிர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. உடலிலுள்ள எலும்புப்பகுதிகளை உறுதியாக வைத்திருக்க பயன்படுகிறது.
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறைகிறது.
இருமல், கபம், சாளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது
வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
அஜீரணத்தை வெந்தயக்கீரை குறையச் செய்கிறது.
வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, வயிறு உப்பீசமாக காணப்படுதல் போன்ற வயிற்று கோளாறுகளை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது.
 

Comments

 1. உபயோகமான தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. அன்பின் தொழிற்கள நிர்வாகிகளே

  அருமையான தகவல் - பகிர்வினிற்கு நன்றி - பயன் படுத்திப் பார்க்கலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. மிக நல்ல தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. படமும் தகவலும் செய்து பார்க்கத் தூண்டுகிறது. ஆரோக்கியத்திற்கு சாப்பிட்டுப் பார்க்கலாம்.
  நல்ல தகவலுக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்