இணையதளவாசிகளே… உஷார் !


Stock Photograph - hacker typing. 
fotosearch - search 
stock photos, 
pictures, wall 
murals, images, 
and photo clipart    இன்று, ஒரு தனி மனிதன் வெளியுலகில் உலா வருவதைக் காட்டிலும் இணையதளங்களில் உலா வருவது தான் அதிகம். அதுவும்ம, பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலையதளங்கள் வந்த பிறகு இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கணிணி முன்பே காத்துக் கிடக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

                                 இணையதளவாசிகளே… உஷார் !
        இணையதளங்களில் தனக்கு வேண்டிய தகவல்களை தேடப்போய் எங்கெங்கோ சுற்றி  அலைந்து ஏதேதோ வலையதளங்களைப் பார்வையிடும் கட்டாயமும் ஏற்படுகிறது. இதன் மூலம் நல்ல விசயங்களுடன் கெட்ட சங்கதிகளும் நம்முள் திணிக்கப்படுவணும் நடக்கிறது. இதனால் தான், குழந்தைகள் இணையதளங்களை உபயோகப்படுத்துவதை தடுக்க வேண்டும் அல்லது அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
       இணையதளங்கள் எப்படி ஆக்கத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறதோ அதுபோல் தீய செயல்களுக்கும் உபயோகப்படுத்தபடுகிறது என்ற கசப்பான உண்மையையும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். பல நேரங்களில் பலரது தொலைப்பேசி ஒட்டுக்கேட்கப் படுகிறது என்ற சர்ச்சை எழுவது அனைவருக்கும் தெரிந்ததே, அதே போல நீங்கள் இணையத்தில் உலவுவதும் கண்காணிக்கப்படுகிறது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
       ஆம், இணையத்தில் உங்கள் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகிறது. நீங்கள் எந்தெந்த வலைதளங்களை பார்க்கிறீர்கள், என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பன போன்ற அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. பொதுவாக, ஜிமெயில் அக்கவுண்ட்,சாட்டிங், ஆர்குட், விவரங்கள் பற்றி அதிகம் கேட்கபடுகின்றதாம்.
இதுகுறித்து கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலில்…
       கூகுளிடம் இத்தகைய தகவல்களை கோருவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம். இந்த ஆண்டின், கடந்த 6 மாதங்களில் மட்டும் இணைய பயன்பாட்டாளர் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறதாம். அமேரிக்காவோ  7669 வேண்டுகோள்களை விடுத்து முதல் இடத்திலும், 1566 வேண்டுகோள்களுடன் பிரேசில் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனவாம். மொத்தத்தில் இணையதள உபயோகிப்பாளர்கள் பற்றிய கிட்டத்தட்ட 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாம்.
       இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இத்தகைய தகவல்களைக் கோருவது அதிகரித்து வருகிறது என்கிறது கூகுளின் தகவல். பல வழக்குகளை தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து பார்க்கவும், தீர்ப்பு கூறவும் இத்தகைய தகவல்கள் நீதிமன்றங்களுக்கு அவசியப்படுகின்றனவாம். நடப்பாண்டில் மட்டும் 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் 596 தகவல்கள் நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளனவாம்.
       இதுவே, 2010-ல் 125 விவரங்கள் இணையதளங்கள் மூலம் கொடுக்கப்பட்டதாம். பல நாடுகள் தீவிரவாதமும், ஊழலும் பெருகி வரும் நிலையில் இத்தகைய தகவல்கள் கோரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
      எனவே, இணையதளவாசிகளே உங்களையும் யாரேனும் கண்காணிக்கலாம், உஷார்…உஷார்….!

Comments

  1. அப்ப நான் பார்த்ததெல்லாம்...பார்திருப்பாங்களா...? நண்பர்களே உஷார்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்