தலையும் மருந்தே !


                                                            தலையும்  மருந்தே !
                 இலை, தலைகளே கால்நடைகளுக்கு உணவு. அதுவே மனிதர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அவற்றில் கருந்துளசி,கறிவேப்பிலை, வெற்றிலை போன்றவற்றிக்கு முக்கிய பங்கு உண்டு.
கருந்துளசி
             அடிக்கடி தோன்றும் சளித்தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நுரையீரலுக்கு வலுவைத் தரும் அற்புத மூலிகை கருந்துளசி. ’ஆசிமம்டெனியு புளோரம் டைப்பிகா’ என்ற தாவரியல் பெயர் கொண்ட லேமியேசி குடும்பத்தை சேர்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள், கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
      2 அல்லது 3 கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சிக் குடிக்க,பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை,ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி, இலைகளை மென்று சாப்பிட நிவாரணம் கிடைக்கும் .
கறிவேப்பிலை
            கறிவேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது.   தாவரியல் பெயர் ‘மொரையா   கோய்னிஜா’.ரூட்டேசி குடும்பத்தை சேர்ந்த இதில் ஏ,பி,சி உட்பட வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்துகள் உள்ளன. இதுமட்டுமின்றி ,அயாமையின், ஆஸ்பர் ஜான்சொரின் ஆஸ்பார்டிக், கோயினிஜாக் குளுக்கோசைட்ஒலியோரைசின், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. பச்சையாகவவோ அல்லது வேக வைத்தோ உண்ணலாம்.இதனால், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
     ரத்தம் சம்பந்தமான நோய்கள், கண் நோய்கள்,பரம்பரை நரை, இளநரை, முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஞாபக சக்தியை அதிகபடுத்தும் திறன் கொண்டது. கறிவேப்பிலை கொழுந்து, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியை தலா கைப்பிடி அளவு, காலை வெறும் வயிற்றில் மென்று சாற்றை விழுங்கி வந்தால், ஒரு வருடத்துக்குள் வெண்குஷ்டத்தைக் குணப்படுத்த முடியும்.
     கறிவேப்பிலை ரத்ததில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, அறிவுத்திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. தினசரி பச்சை கறிவேப்பிலையை மென்று வந்தால், குரல் இனிமை பெறும், சளித்தொல்லை நீங்கி,கண் பார்வை பளிச்சிடும். காலை, மாலை என தினசரி இரு வேளை 10 கறிவேப்பிலை மென்று வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.
   கறிவேப்பிலையை மதிப்பு கூட்டும் விதமாக, பல்வேறு பொருட்களாக உருமாற்றலாம். கறிவேப்பிலைப்பொடி, சட்னி, துவையல், தலைமுடிக்கு தைலம் என, எளிய தொழில் நுட்பத்தில் உருவாக்க முடியும்.சிறிய, பெரிய மற்றும் புதிய தொழில் முனைவோர் இதை முயற்சித்து வெற்றி பெறலாம்.
வெற்றிலை
       வெற்றிலையில் மிகுந்த மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
   அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்கவிட்டு,இலை நன்கு சிவந்ததும், வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்து,சொரி, சிரங்கு,படைக்கு தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அதேபோல் உமிழ்நீர் பெருக்க, பசி உண்டாக, பெண்களுக்கு பால் சுரக்க,நாடி நரம்பை உரமாக்க, வாய் துர்நாற்றத்தைப் போக்க, வெற்றிலை ஒரு சிறந்த நிவாரணி.
    மூச்சுத்திணறல், சளி, ஆஸ்துமா, ஜீரண சக்தி, நுரையீரல் சம்மந்தமான நோய்களுக்கு வெற்றிலையை தொடர்ந்து சேர்த்து வர நல்ல பயன் கிடைக்கும்.

Comments

  1. ஆம் தழைகளும் மருந்துதான்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்