வரலாறு சொல்லும் கல்வெட்டுகள்


                                                
                           வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் நாம், பண்டைய தொகுப்புக்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அதற்கு நமக்கு உதவுவது கல்வெட்டுகள். எங்காவது சுற்றுலா சென்றாலோ,முக்கிய ஸ்தலங்களுக்கு சென்றாலோ இவை பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை. பண்டைகாலத்தில் நீண்ட காலம் அழியாமல் இருக்க வேண்டும் என்று கருதப்பட்ட செய்திகள், கற்களில் செதுக்கப்பட்டன.இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு என அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டாக பொறிக்கபட்டன. கல்வெட்டுகள், பெரும்பாலும் பொதுமக்களின் பார்வைக்கு செதுக்கபடுவதால்,இவை பொது இடங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. கோவில்கள், குகைகள், பொது இடங்கள்,மண்டபங்கள், வெற்றித்தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோரின் நினைவுக்கற்கள் போன்றவற்றில் கல்வெட்டுக்கள் இருப்பதை காணலாம்.

கல்வெட்டுகள் பொறிக்கும் பழக்கம், உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகள் இறந்துபட்ட அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மொழிகளிலுமான கல்வெட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன.

கல்வெட்டுகள்,பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து இருக்கக் கூடியவை. ஆதலால் மிகப்பழங்காலத்து வரலாற்றுச்செய்திகள்,
நிகழ்வுகளுக்குமான நம்பகமான சான்றாக இவை திகழ்கின்றன. பல கல்வெட்டுகள் ஒரு மொழியில் மட்டுமின்றி, பல மொழிகளிலும் ஒரே செய்தியை குறிக்கும்படி அமைந் துள்ளது.இத்தகைய கல்வெட்டுகள் வழக்கொழிந்து மறுக்கப்பட்டு விட்ட மொழிகள் பலவற்றை வாசித்து அறியவும்,அவற்றை மீட்டு உருவாக்கவும் உதவுகின்றன.பண்டைய எகிப்து மொழி இவ்வாறு உருவாக்கப்பட்டது தான்.

பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்ததின் மூலம்,எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.தமிழகத்திம் மிகப்பெரிய கல்வெட்டுகள், நடுகற்களில் வெட்டப்பட்டவை. தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் உள்ள செய்திகளும் இதற்கு சான்றாக அமைகின்றன. 

தொல்காப்பியத்தில், போர்க்களத்திலே வீர மரணம் அடைந்தோருக்கு கல்லெடுத்தலும், அக்கல்லில் அவர் தம் வீரச்செயல்களை பொறித்தலும் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
                      

Comments