உலக அதிசயமாம் பிரமிடும் அதன் பயன்களும்                                   

             உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிட்(pyro என்றால் நெருப்பு, amid என்றால் மையம்) என அழைக்கப்படும், சியாப் பிரமிடு, எகிப்து நாட்டில் கெய்ரோ நகரத்திற்கு மேற்கே 15 கி.மீ தூரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 லட்சம் டன் எடையும், (2 லிருந்து 15 டன் எடை உள்ள 23 லட்சம் கற்களால்), 481 அடி உயரமும்,5 லட்சம் பேர்களால் சுமார் 50 ஆண்டு காலம், 500 மைல்களுக்கு அப்பால் உள்ள அஸ்வான் மலையிலிருந்து கொண்டு வந்து நிர்மானித்திருக்கும் முறை அவர்களது கட்டிடக்கலை, பொறியியல் விஞ்ஞான அறிவு, கணிதப் புலமை, ஆத்ம தத்துவஞானம், ஆன்மிகச்சிந்தனை, மனித நேயம், தெய்வீக சக்தி, ஆழ்ந்த வானவியல் ஆகியவை, நமது 21ம் நூற்றாண்டு மனித குலத்தின் அறிவுக்கு சவால் விடும்வகையில் அமைந்துள்ளதோடு பிரம்மிப்பையும் ஊட்டுகின்றன. உள்ளே உள்ள அரசரின் அறை, இந்த பாலைவனத்தின் நடுவிலும் ஆண்டு முழுவதும் கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மாறாத (68*F) உஷ்ண நிலையில் எந்தவித கருவியின் உதவியும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதும், வைக்கப்பட்டுள்ள 23 லட்சம் கற்களில் கற்களுக்கிடையே உள்ள நெருக்கம் காகிதப்படிமனே துல்லியமாக உள்ளதும், உள்ளே உள்ள தெய்வீக சக்தியின் ஆற்றலும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.
 • v  இவை எல்லாத்தையும் விட ஆச்சரியத்தை அளிப்பவை இந்த பிரமிட்டின் ஒரு பக்க அடிப்பாக நீளம் (760 அடி) 231.6 மீட்டர். இதன் அடிப்பாக சுற்றளவை( 4 * 2331.6 மீ), இதன் செங்குத்து உயரத்தின் இருமடங்கால் வகுத்தால் வருவது 3.142857 ( அதாவது p என்ற இந்த மதிப்பை 5000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து பிரமிட்டை நிர்மானித்தவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்)
 • v  இந்த பிரமிட்டின் செங்குத்து உயரத்தை 100 கோடியால் பெருக்க வரும் எண் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
 • v  இந்த கிரேட் பிரமிட்டின் மையத்தில் ஒரு நேர்கோடு வரைந்தால் அது பூமியில் உள் 5 கண்டங்களையும், கடல்களையும் இரு சம்பாதிகளாகப் பிரிக்கிறது. இதன் பொருள் இந்த கிலேட் பிரமிட் பூமியின் கவர்ச்சி மையத்தில் கட்டப்பட்டுள்ளதே.
 • v  அரை வினாடி நேரத்தில் பூமி கடக்கும் தூரத்தின் 1000 த்தில் ஒரு பாகத்தை இந்த பிரமிட்டின் ஒரு பக்க அடிப்பாக நீளமாக அமைத்துள்ளனர். இதற்கு பூமியின் சுழற்சி, வேகம், அளவு ஆகியவற்றை முன்னரே நன்கு அறிந்திருக்க வேண்டும்.
 • v  இந்த பிரமிட்டின் முக்கோணப் பரப்பு அந்த முக்கோணத்தின் உயரத்தின் வர்க்கத்துக்குச் சரி சமமாக அமைந்துள்ளது.        

பிரமிட்டின் அதிசய ஆற்றலின் பயன்கள்( கிரேட் பிரமிட்டின் மாதிரி ஒன்றை அட்டை, பிளாஸ்டிக், பிளைவுட் கொண்டு நாமே தயாரிக்கலாம்.)
 • Ø  மாதிரி பிரமிட்டின் மையத்தில் வைக்கப்பட்ட சவரக்கத்திகள், பிளேடுகள், கத்தரிக்கோல்கள் ஆகியவற்றின் முனை மழுங்குவதில்லை. மழுங்கிய முனை மறுபடியும் கூராக்கப்பட்டுவிடுகிறது.
 • Ø  பிரமிட்டின் மையத்தில் வைக்கப்படும், சமைத்த, சமைக்காத உணவுப்பொருட்கள் வெகுநாட்கள் கெடாமள் இருக்கின்றன.
 • Ø  இட்லி மாவு, பால் போன்ற புளிக்கும் பொருட்களும் புளித்துப்போவதில்லை.மாறாக ருசியும் கூடுகிறது.\
 • Ø  காஸ்மிக் கதிர் ஆற்றலால் உள்ளே வைக்கப்பட்ட நீர் ஓரிரு நாட்களில் உடல் நலத்தைக் கூட்டும் சக்தியை பெறுகிறது.
 • Ø  உள்ளே வைக்கப்படும் விதைகள் வீரியம் அடைந்து சீக்கிரம் முளைக்கிறது. உள்ளே வைக்கப்பட்ட பழங்கள், பூக்கள் சுருங்கினாலும் நிறம், ருசி மாறுவதில்லை.
 • Ø  படுத்துறங்கும் அளவிற்கு ஒரு மாதிரி பிரமிட்டை தயாரித்து அதனுள் தூங்கி வந்தால் உடல் உபாதைகள், வலிகள் உடனே குணமடையும்.வேட்டுக் காயங்கள் சீக்கிரம் ஆறும்.
 • Ø  கண்பார்வை குறைகள் நிவர்த்தியாகி கண்பார்வை கூடுகிறது. ஞாபக மறதி குறைந்து, நினைவாற்றல் கூடுகிறது.
 • Ø  காலையில் எழுகின்ற போது, புத்துணர்வு, தெம்பு, தெளிவு கூடி மனச்சலனம் நீங்குகின்றன.
 • Ø  பிரமிட்டின் உள்ளே உட்கார்ந்து தியானிப்பவர்கள், வழக்கத்திற்கு மாறாகவடக்கு திசை நோக்கியே அமர வேண்டும். நிறைவான தியானத்திற்கும், மனவளம், நினைவாற்றல் பெருகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் மிகவும் உதவிகரமாக உள்ளது.நீண்ட ஆயுளைத் தருவதோடு முதுமையைக் குறைத்து இளமையை பெறவும் இது வழி வகுக்கிறது.
 • Ø  நம் தலையை வடப்பக்கம் வைத்துதான் படுக்க வேண்டும் என்பதோடு அல்லாமல், பிரமிட்டின் அடிப்பக்கம் ஒன்று வடக்கு, தெற்கு திசையில் முடிந்தால் Geographic North or True North கண்டுபிடித்து, அந்த திசையில் அடிப்பாகம் அமையுமாறு பயன்படுத்தவும்.
 • Ø  மாதிரி பிரமிட் ஒன்றை அறையிலேயே வைத்தால் அதன் தெய்வீக ஆற்றலால், அறையில் உள்ள கிருமிகள் அழிந்து, காற்று தூய்மையடைந்து, வீட்டிலுள்ளோரின் உடல் நலத்தை உயர்த்திப் பாதுகாத்து, வீட்டை ஒரு சக்தி களமாக மாற்றும்.
 • Ø  மற்றும் நம் அறிவுக்குப் புலப்படாத பல சக்திகளை இது உள்ளடக்கி உள்ளது. பிரமிடின் உயரத்தின் 3ல் ஒரு பங்கு உயரத்தில் சக்தி மையம் உள்ளது
 • Ø  பல நாடுகளில் இதனை வைத்துச் செய்யப்படும் சோதனைகளில் தினமும் பல புதிய சாதனைகள் நீண்டு கொண்டே வருகின்றன.    
பிரமிட்டின் உடனடி உபயோக பயன்கள்:

 • நீண்ட நாள் கவனிப்பாரற்று கிடந்த பூமியை விலைக்கு வாங்கியதும், நல்ல நாளிலேயே கோமியம் தெளித்து விட்டு வடகிழக்கு மூலையில் மஞ்சள் நிற பிரமிட்டை அங்கு நிலத்தடியில் பதிக்க நன்மைபயக்கும்.
 • துர்மரணம் ஏற்பட்ட இடங்களில் மத்திம பாகத்தில் நீல  நிற பிரமிட்டை  ஓராண்டு இருக்கச்செய்து பின்பு அதனை கடலில் போட்டுவிட ஆத்மா சாந்தி அடையும்.
 • ஒருவருக்கு சனிதிசை, சனி புக்தி நடக்கும் போது சுயபுக்தியின் காலத்தில் அவர் வசிக்கும் மேற்கு பாகம் நீல நிற பிரமிட்டை இருக்கச் செய்தால் யோகம் அதிகரிக்கும்.
 • தென்திசை நோக்கி(எமதிசை)யிருக்கும் வீடுகளில் செவ்வாயின் தாக்கம் அதிகம் இருப்பதால் அந்த வீட்டின் சொந்தக்காரர் செவ்வாய் திசை, புக்தி காலங்களில் நிரந்தரமாக சிகப்பு நிற பிரமிட்டை இருக்கச்செய்தால் நன்மை பயக்கும்.      
 • இதே போல் துணி வியாபாரம் செய்பவர்கள் வெள்ளை நிற ஏழுபட்ட பிரமிட்டையும், இரும்பு போன்ற உலோக கடைகளில் நீல நிற பிரமிட்டையும் வைத்தால் வியாபாரம் பெருகும்.
 • நீண்ட நாட்கள் தடைபட்ட திருமணம் நடைபெற அறையில் வெள்ளை நிற பிரமிட்டை வைக்க வேண்டும்.                                      
                   இன்னும் இது போல் பிரமிட்டால் உண்டாகும் பயன்கள் பற்பல.


Comments

 1. வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பிரமிடுகளைப் போய் பார்க்கவேண்டுமென்பது என் ஆசை. பலமுறை பார்க்கக் கிடைத்தாலும் ஓகே தான்!

  பிரமிட் பற்றி பல விஷயங்கள் (அதன் வடிவமைப்பில் இருக்கும் கணித விஷயங்கள்) வியப்பூட்டுகின்றன.
  பிரமிட் வடிவ அமைப்பினால் ஏற்படும் நன்மைகளும் ஏராளம் என்று இந்தப் பதிவு மூலம் தெரிய வந்தது.

  மிகச்சிறந்த பதிவு.

  ஆசிரியர் பெயர் இல்லையே?

  ஆசிரியருக்கும், தொழிற்களத்திற்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஆசிரியர் பெயர் கீழே இருப்பதை இப்போதுதான் பார்த்தேன்.
  மகேஸ்வரிக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. அன்பின் மகேஸ்வரி - பிரமிட் பற்றிய அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்