உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்


                                       
                மனிதனின் அடிப்படை தேவையே உணவு, உடை, இருப்பிடம் தான். இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும், அன்னியநாடுகளின் உணவு வருகையாலும், நம் இன்றைய தலைமுறையினர் உடல் பருமன்,மற்றும் பல நோய்களினால் அவதிபடுகின்றனர். இதில் இளம் தலைமுறையின் மிகபெரிய பிரச்சனை உடல் பருமன்.

நம் இந்திய உணவு பொருட்களான,
v  மஞ்சள்
v  கொத்தமல்லி
v  இஞ்சி
v  தேன்
v  தயிர்
v  முட்டைக்கோஸ்
முதலியவை உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
மஞ்சள்
                 இந்திய உணவுகளில் மஞ்சளுக்குத் மனி மகத்துவம் உண்டு.
மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்புச்சத்தைக் குறைப்பதில் பிரதான இடம் வகிக்கிறது. இது உடல் பருமனிலிருந்து உடலை காப்பதால் உயர் ரத்த அழுத்தத்திலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
கொத்தமல்லி

ஜீரணத்தைக் கூட்டுவதில் கொத்தமல்லிக்கு நிகரில்லை என்பது யாவரும் அறைந்ததே. உடலின் கொழுப்பைக் குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்குண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரித்து உடலை ஸ்லிம் ஆக்கும் சிறந்த மூலிகையாக செயல்படுகிறது.
இஞ்சி
                அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வது ஜீரணத்துக்கு நல்லது. திடவுணவில் சேர்க்க முடியாத பட்சத்தில், இஞ்சி சேர்த்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது 33மூன்று முறை பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேன்
             எடையை குறைப்பதில் தேனுக்கு சிறந்த இடம் உண்டு. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் எலும்பிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் உடல் எடை தானாகக் குறையும்.
இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், உடல் பருமன் என்ற பேச்சிற்க்கே இடம் இல்லை.
தயிர்
      தயிரில் புரதம், கால்சியம்,பாஸ்பரஸ், வைட்டமின் பி6,பி12,ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் உள்ளன.தையாமின் உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால் குடல்களிலிருந்து ரத்தத்தில் உணவை கிரக்கவும் உதவுகிறது. எனவே உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் தயிரை தாராளமாக சாப்பிடலாம்.
முட்டைக்கோஸ்
             அதிக உடல் பருமன் உடையவர்கள்,பச்சை முட்டைக்கோஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் கட்டுக்குள் வரும். உடல் பருமன் கட்டுபட்டாலே இதயநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது.

இது போல் அன்றாடம் நாம் பயன் படுத்தும் உணவு பொருட்களான
  • கறிவேப்பிலை
  • வெள்ளைப்பூண்டு
  • பாசிப்பருப்பு
  • மோர்
  • சிறு தானியங்கள்
  • பட்டை,கிராம்பு    
போன்றவற்றிலும் உடலை ஸ்லிமாக்கும் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அதை விடுத்து உடல் பருமனைக் குறைக்க, நம்மவர்கள் மருந்துகளையும், அழகு நிலையங்களையும் நாடிச் சென்று உடலை வருத்திக் கொள்வதுடன், பணத்தையும் செலவிடுகின்றனர்.


நல்ல சத்துள்ள உணவே, உடல் ஆரோக்கியத்திற்கு வழி, என்று நம் யுவன்,யுகதிகள் தெரிந்து கொண்டால் சரி தான்.    

Comments

  1. அருமையான உணவுகளை பற்றிய அழகான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்