நம் நாட்டின் முதன்மையானவர்களை தெரியுமா?


                               
                        நம் நாட்டில் முதன்மையானவர்களுக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. ஆதலால் தான் நாம் நம் குழந்தைகளை, எதிலும் முதன்மையாக வர வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம், அதற்கான முயற்சியிலும் அவர்களை சிறுவயதிலேயே ஈடுபடுத்தவும் செய்கின்றோம். ஏனென்றால் முதன்மையானவர்களைத்தான் நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். அப்படி நம் நாட்டில் முதன்மையாக திகழ்ந்தவர்கள் சிலரை இங்கு காண்போம்.
·           இந்தியாவின் முதல் ஜனாதிபதி
-டாக்டர். ராஜேந்திரபிரசாத்
·           இந்தியாவின் முதல் பிரதமர்
-பண்டித ஜவஹர்லால் நேரு
·           இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
-இந்திரா காந்தி
·           இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
-சரோஜினி நாயுடு
·           இந்தியாவின் முதல் பெண் முதல்வர்
-சுசிதாகிரிபாலனி
·           இந்தியாவின் முதல் மூத்த பிரதமர்
-மொரார்ஜிதேசாய்(81 வயதில்)
·           இந்தியாவின் இளவயது பிரதமர்
-ராஜிவ் காந்தி(40 வயதில்)
·           இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர்
-ஜெனரல் கே.எம்.கரியப்பா
·           இந்தியாவின் சுப்ரிம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி
-மீரா சாகிப் பாத்திமாபீவி
·           முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த பெண்
-ஆர்த்திசகா
·           பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர்
-தாதாபாய் நௌரோஜி
·           எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்
-பச்சேந்திரிபாய்
·           இந்தியாவின் முதல் ரயில் ஓடிய வழித்தடம்
-மும்பை-தானே (ஏப்ரல் 16, 1853)
·           இந்தியாவின் முதல்செய்தித்தாள்
-பெங்கால் கெசட்(ஜன 27,1780)
·           இந்தியாவின் முதல் விண்கலம்
-ஆரியபட்டா(1975)
·           இந்தியாவின் முதல் ராக்கெட்
-ரோஹினி(1967)
·           இந்தியாவின் முதல் திரைப்படம்
-ராஜா ஹரிச்சந்திரா
·           இந்தியாவின் முதல் பேசும் படம்
-அலம் ஆரா
·           இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்றவர்
-பானு ஆதித்யன்
·           இந்தியாவின் முதல் சிறப்பு ஆஸ்கர் விருது பெற்றவர்
-சத்தியஜித்ரே
·           இந்தியாவின் முதல் விமானி
-ஜெ.ஆர்.டி.டாடா(1929)
·           இந்தியாவின் முதல் பன்னாட்டு விமான நிறுவனம்
-டாடா ஏர்லைன்ஸ்(1936)
·           இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை
-இந்திரா
·           இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
-இரவீந்திரநாத் தாகூர்
·           இந்தியாவின் முதல் பெண் விமானி
-துர்கா பேனர்ஜி
·           இந்தியாவின் முதல் பெண் மந்திரி
-விஜயலட்சுமி பண்டிட்
·           இந்தியாவின் முதல் வைஸ்ராய்
-கானிங் பிரபு
·           இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற பெண்
-மதர் தெரசா(1979)
·           இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர்
-பஞ்சமாருதி அனுராதா(26 வயதில்)
·           இந்தியாவின் முதல் கப்பல் படை தளபதி
-வைஸ்-அட்மிரல் கட்டாரி
·           எவரேஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர்
-டென்சிங்
·           இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண்
-கல்பனா சாவ்லா
·           இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்
-ரீட்டா பரியா

Comments

 1. தொழிற்களத்தின் புதுவரவாக இருந்தாலும், மகேஸ்வரியின் பதிவுகள் அனைத்தும் நல்ல பயனுள்ள பகிர்வுகளாக இருக்கின்றன..

  தொடருங்கள்

  வாழ்த்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

   Delete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்