‘ உண்ணும் உணவே மருந்து’


                                                        
       நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் ருசியை தந்து பசியை போக்குவதை போலவே, நம் உடலில் உள்ள பல நோய்களை போக்கும் மருத்துவ குணமும் உள்ளது. அவை அப்படி ஒன்றும் தேடிக்கிடைக்காத அரிய வகை காய்கறி பழங்கள் அல்ல.சாதாரணமாக தினமும் பயன்படுத்தக் கூடியதே. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ஆரஞ்சு
           தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்பார்கள்.ஆனால் ஒரு ஆப்பிளில் 10 மில்லி அளவே வைட்டமின் ‘சி’ உள்ளது. ஆரஞ்சில்,இதைப் போல் ஐந்து மடங்கு அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
முட்டை
     முட்டைகளில் சில வெள்ளை நிறமாகவும், சில பழுப்பு நிறமாகவும் இருக்கும். பழுப்பு நிற ஓடு கொண்ட முட்டை தான் சத்துள்ளது என, சிலர் நம்புகின்றனர்.அது தவறு. இரண்டிலும் ஒரே அளவுதான் சத்துள்ளது.
கேரட்
       வைட்டமின் ‘ஏ’ சத்து குறைவாக உள்ளவர்கள் மங்களான மாலை நேர வொளிச்சத்தை காண முடியாது. இதை மாலை கண் நோய் என்பர். வைட்டமின் ‘ஏ’ கேரட்டில் அதிகம் உள்ளது. கேரட் சாப்பிட்டு வந்தால் இந்நோய் வருவதை தடுக்கலாம். பொதுவாக கேரட் உடலுக்கு மிகவும் நல்லது.
பாகற்காய்
       கசப்பாக இருக்கும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பாகற்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் அழியும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது.அதுமட்டும் அல்லாது ஜூரம்,இருமல், இரைப்பு,மூலம் இருப்பவர்கலும் உண்ணலாம்.
பீட்ருட்
         பீட்ருட்டை பொரியல் செய்து சாப்பிடுவதைவிட பச்சையாக மிக்சியில் அரைத்து , அதைப் பிழிந்து ஜூஸாகக் குடித்தால் வயிற்றுப்புண்,வாயு, பித்தம் போன்ற பல வயிறு சம்பந்தமான பிரச்சனை தீரும்.பெண்களின் உதிரபோக்கு பிரச்சனைக்கு பீட்ருட் மிகவும் ஏற்றது.
தக்காளி
       ரசம்,சாம்பார்,குழம்பு ஆகியவற்றில் நாட்டுத் தக்காளி பயன் படுத்தினால் சுவையும்,மணமும் நன்றாக இருக்கும். ஆனால் நாட்டுத் தக்காளியை பச்சையாக சாப்பிடவோ,ஜூஸ் பிழிந்து குடிக்கவோ கூடாது. காரணம் கிட்னியில் கல் உண்டாக்கும் திரன் நாட்டுத் தக்காளிக்கு உண்டு. தக்காளிச்சாறு கல்லிரல் நோய்க்கு மிகவும் ஏற்றது.
நெல்லி
    நெல்லிக்காய், நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது.
  நெல்லிக்காயில், வைட்டமின் ‘சி’ வேறெந்த காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவு 600 மி.கி., உள்ளது. கால்சியம் 50 மி.கி., இரும்புச்சத்து 1.2 மி.கி., உள்ளது.ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, தலைமுடி உதிராமல் வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தடுக்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதால், மனத்தெளிவு, புக்திக்கூர்மை மற்றும் ஞாபக சக்தி உண்டாமிறது. 

Comments