விவசாயிகளின் நண்பன், காடுகளின் சேவகன்


                  
                   நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் சின்ன சிறு உயிரினங்கள் கூட, நம் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கின்றது. நம் வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாதது மரம். மரம் வளர கறையான்களும், மண்புழுக்களும் மிகவும் உதவி புரிகின்றன.

கறையான்

கறையான்கள் பூமிக்கு அடியில் நீர்ப்பசை உள்ள குழைந்த மண்ணை,பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்து,தனது உமிழ்நீருடன் கலந்து, புற்றுக்களை அகலமாகவும்,உயரமாகவும்,சிறுமலை போன்ற அமைப்பில் கட்டுகின்றன

கறையான் புற்றுகள்,மிகவும் குளிர்ச்சியாகவும்,பல் வேறு அறைகளுடன் தங்கவும்,தப்பிக்கவும் ஏதுவாக இருக்கும். கறையான் புற்று மண்,வளமான நிலத்துக்கு ஊட்டச்சத்து மிகுந்தது. கறையான்கள்,பூமியின் மீது விழும் இலை,தழை,குப்பை,மரங்கள் என அனைத்தையும் விரைவாக அரித்து, துகள்களாக்கி விடும்.

இப்படி அரிக்கப்பட்ட துகள்கள் மண்ணோடு மட்கி,காட்டின் வளத்தை அதிகரிக்க செய்கின்றன.மேலும் பல வகையான செடிகொடிகள்,மரங்கள் மீண்டும் தழைக்க பேருதவியாகவும் உள்ளன.

மண்புழு

கறையான்களைப்போல் மண்ணிற்கு வளம் சேர்க்கும் மற்றுமொரு உயிரினம் மண்புழு. மண்புழு மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்வதுடன், மண்ணிற்கு உரமாகவும்,செடிகள் நன்கு செழித்து வளரவும் அது உதவுகின்றன.

ஆனால்,இன்று பிளாஸ்டிக் கழிவுகளினாலும், அவை முறையாக அப்புறபடுத்தாமல்,நேரடியாக மண்ணில் கொட்டுவதாலும் மண்ணின் வளம் கெட்டுப்போவதுடன், மண்புழு, கறையான் போன்ற உயிரினங்களையும் வேரோடு அழித்து விடுகின்றன. ஆதலால், நாம் கூடியவரை பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகிக்காமல், மண்ணின் வளத்தை பெருக்கி, காடுகள் செழிக்க உருதுணையாக இருப்போம்.

Comments