Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உடல் உபாதையா?இந்த பழங்களை சாப்பிடுங்க!


                                                    
                 இயற்கை  நமக்கு கடவுள் கொடுத்த வரபிரசாதம். பண்டைகாலங்களில் மக்கள் இயற்கை உணவுகளையே உண்டு, நல்ல ஆரொக்கியத்துடன் நெடுங்காலம் நோய் நொடி இன்றி வாழ்ந்து வந்தனர்.அவர்களது உணவு பழக்கவழக்கமே அவர்கள் நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்தது. அவர்கள் நோய் வாய் பட்ட போதும் உணவுகளையே மருந்தாக பயன்படுத்தினர்.
       ஆனால் இன்றைய நம் இளம் தலைமுறையினர் வெளிநாட்டு உணவு பழக்கவழக்கத்தினால், சிறுவயதிலேயே பற்பல நோய்களுடன் துன்புற்று, இறுதியில் மரண படுக்கையிலும் வீழ்கின்றனர்.ஆதலால் நாம் நம் முன்னோர்களின் உணவே மருந்து பழக்கத்தை பின்பற்றி நம் வருங்கால சன்னதிகளுக்கும் அதை கற்றுத்தருவோம்.
              நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள்.
  அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய உணவுகளில் மாதுளம் பழம், வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு.அவற்றின் தனிச்சிறப்பை இங்கு காண்போம்.
வெள்ளரி
            எல்லோருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ,கட்டாயம் இடம் பெறுவது வெள்ளரி. ஏனெனில, தெவிட்டாத சுவையும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன் வெள்ளரிக்காய் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர், ‘குக்குமிஸ் ஸாடிவாஸ்’. இது மலை பகுதில் நன்கு வளரும் தாவர வகையைச் சார்ந்தது.
     இமய மலைப்பகுதியில்,’சிக்கிம் வெள்ளரி’ 15 அங்குல நீளமும், ஆறு அங்குல கனமும் கொண்டுள்ளது. ‘ஜமைகா’ நாட்டில் வெள்ளரி, அளவு மற்றும் நிறத்தில் எலும்பிச்சை போன்று உள்ளது. கிழக்கிந்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிரிடுகின்றனர். விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயை பழவகையிலும், மக்கள், காய்கறி பட்டியலிலும் வைத்துள்ளனர். வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. பச்சையாகவே உண்ணக்கூடிய தனிச்சுவையுடையது. காய்கறிகளில் குறைவான கலோரி அளவை கொண்டதும் கூட. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் உள்ளது.
     உயர் தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பிராஸ்பரஸ், இரும்பு, வைடமின் பி போன்றவை உள்ளன. ஆந்திராவில் வெள்ளரியால் ஆன பச்சடி கட்டாயம் இடம் பெறும். ஏனெனில், ஆந்திரா சமையலில் காரம்அதிகம் இருப்பதால் உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தும். இடையில் நீர் அருந்தாமல் சாப்பிடவும் உதவும்.
வெள்ளரியின் மருத்துவ குணம்
         வெள்ளரிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
    வெள்ளரி சாப்பிடுவதால், சிறுநீர் பிரிவை தூண்டச்செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. கீழ்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்குவதில், வல்லமையானது என சமிபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. வறண்ட தோல், வறண்ட முகம் உடையவர்கள் வெள்ளரிச்சாற்றை குடிப்பதால் வறட்சி நீங்கும். தயிரில் வெள்ளரியை நறுக்கி போட்டு, அதனுடன் காரட், பீட்ருட், தக்காளி, முள்ளங்கி போன்றவற்றைக் கலந்து வெஜிடபிள் சாலட் போல் பரிமாறலாம். இதில், உடலுக்கு அதிகமான சத்துகள் அடங்கியுள்ளன.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
    நீரிழிவு நோயாளிகள், எடை குறைய,விதையுடன் கூடிய வெள்ளரிச்சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள சுண்ணாம்புச்சத்து, ரத்தக்குழாய்களை தளர்த்தி, உயர் ரத்த அழுத்ததைக் குறைக்கிறது. தினசரி 2 வெள்ளரி உண்பதால், மலச்சிக்கல் நீங்கி குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும். வெள்ளரிக்காய்ச் சாறு இளநீரை போல ஆரோக்கியமான ரசமாகத் திகழ்கிறது. வெள்ளரியை சமைக்கும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிகின்றன.
    வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வெள்ளரி சாறு அருந்தலாம். காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து சாப்பிடலாம். முடி நன்கு வளர வெள்ளரிச்சாறை அருந்தலாம்.
    இவ்வளவு மருத்துவ குணங்கள்ளுடைய வெள்ளரி நாம் நம் அன்றாட உணவில் சேர்த்து பயன் பெறுவோம்.
                    
மாதுளம் பழம்
      உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள்,குழந்தைகள்,முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது.இருதய நோய்களுக்கு மாதுளம் பழம் மிகவும் ஏற்றது . மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கின்றனர்.
      இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாற்றை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுபடுகின்றது என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. மாதுளம் பழம் நல்ல ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகின்றது.

     சிறுநீரகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாற்றை தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்த போது,அவர்களுக்கு சிறுநிரகத்துக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளையும் மாதுளம் பழம் அளிப்பது தெரியவந்தது.ஆதலால் இவ்வளவு நன்மை பயக்கும் மாதுளம் பழத்தை நம் அன்றாட வாழ்வில் உட்கொண்டு பயன் பெறுவோம்.

Post a Comment

1 Comments

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்