காகிதம் தெரியும்!அதன் பிறப்பிடம் தெரியுமா?


                                                    
                  இன்று, கல்வி துறை மட்டுமல்லாது, அனைத்துத் துறைகளிலும் காகிதத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எவ்வளவு தான் அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், கம்ப்யூட்டர், ஈ - மெயில் என்று முன்னேறி இருந்தாலும் காகிதத்தின் பயன்பாடு குறையாது. அப்பேர்ப்பட்ட காகிதத்தின் பிறப்பிடம், பலரும் அறியாதே! காகிதத்தின் பிறப்பிடம் பற்றியும், அதன் பயன்களைப்பற்றியும் இங்கு காண்போம்.
காகிதம்
         எழுத , அச்சிட பயன்படும் மெல்லிய பொருள் காகிதம். இது மரம்,புற்கள், வைக்கோல் முதலியவற்றிலிருந்து கூழ் போன்ற நார்ப் பொருளை அழுத்தி அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அறியப்பட்ட மிக முக்கியமான  கடிதம், கி.மு., 3500 ஆண்டளவில் ,எகிப்தில் பயன்படுத்தப்பட்டது.இது பப்பிரஸ் தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது.தற்போது நாம் பயன்படுத்தும் காகிதம் கி.பி., 2 ஆம் நூற்றாண்டில் சீனாவில் உருவாக்கப்பட்டது. ‘சாய்லுன்’ என்பவர் தான் காகிதத்தை முதலில் உருவாக்கினார்.
    சீனாவில் பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையை பயன்படுத்தியுள்ளனர். சானர்கள் முதலில் மூங்கில் பட்டையில் தான் எழுதினர். சுமெரியர்கள், ஈரமான களிமண் கொண்டு பல கைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் பப்பிரைஸ் என்ற நாணல் புல்லில் எழுதினர். தமிழர்கள், பனை ஓலையை பக்குவம் செய்து, அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர்.
    தமிழ் இலக்கியங்கள் யாவும், இவ்வாறு பனை ஓலையில் எழுதப்பட்டவையே. பின் பட்டுத்துணியில் வண்ண குழம்பை பயன்படுத்தி, தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக, கற்களிலும், எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் ணோல் அல்லது பன்றியின் தோல் இவற்றில் எழுதினர்.
    கி.பி., 2 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம், கி.பி., எட்டாம் நூற்றாண்டு வரை வேறு எவராலும் அறியப்படவில்லை. கி.பி., எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்துச் சென்றனர். அப்போது காகிதம் உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமையாக்கி தங்களுடன் அழைத்துச்சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள்,இதை உருவாக்கும் கலையைக் கற்றனர்.
    அரேபியர்களிடமிருந்து, ஐரோப்பியர்கள் கற்று, உலகேங்கும் உருவாக்கும் கலையை கற்றனர். காகிதத்தின் பயன்பாடு சீனாவில் இருந்து ஐரோப்பியாவுக்கு பரவியது. அங்கே,12 ஆம் நோற்றாண்டில் காகித உற்பத்தி தொடங்கியது. தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி ,நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே ‘செல்லுலோஸ்’ எனப்படும் காகித கூழாகும். இக்கழிவை நன்கு காய்ச்சி, நீரை வடித்து, கனமான தகடு போன்ற பொருளால் அழுத்தி உருவாக்கினார்கள்ள.இவ்வாறு தான் காகிதம் உருவானது.
    தற்காலத்தில் மரத்துண்டுகளுக்குப் பதிலாக, ரசாயன முறையில் அமிலங்களைச் சேர்த்து வேகவைத்து காகிதகூழ் தயாரிக்கிறார்கள். இயந்திரமயமாக்கப்பட்ட காகித உற்பத்தி, குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும், அச்சிடுவதும் மிகவும் எளிதாகி விட்டது. எகிப்து நாட்டினர் முதன்முதலில் பப்ரைஸ் தாளில் எழுதியதால் ‘பேப்பர்’ என்று அழைக்கின்றனர். அரேபியர்கள் ‘காகத்’ என்றனர். தமிழர்கள் ‘காகிதம்’ என்று அழைக்கின்றனர். போர்த்துகீசியர்கள் ‘கடுதாசி’ என அழைக்கின்றனர்.

      


Comments