அன்னாசியில் ஆரோக்கியம்


       அன்னாசியில் ஆரோக்கியம்
                 இயற்கை  நமக்கு கடவுள் கொடுத்த வரபிரசாதம். பண்டைகாலங்களில் மக்கள் இயற்கை உணவுகளையே உண்டு, நல்ல ஆரொக்கியத்துடன் நெடுங்காலம் நோய் நொடி இன்றி வாழ்ந்து வந்தனர்.அவர்களது உணவு பழக்கவழக்கமே அவர்கள் நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்தது.அவர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நான்கு, ஐந்து தலைமுறையுடன் நெடுங்காலம் மகிழ்ச்சியாக தம் வாழ்வை கழித்தனர். அவர்கள் நோய் வாய் பட்ட போதும் உணவுகளையே மருந்தாக பயன்படுத்தினர்.
       ஆனால் இன்றைய நம் இளம் தலைமுறையினர் வெளிநாட்டு உணவு பழக்கவழக்கத்தினால், சிறுவயதிலேயே பற்பல நோய்களுடன் துன்புற்று, இறுதியில் மரண படுக்கையிலும் வீழ்கின்றனர். ஆதலால் நாம் நம் முன்னோர்களின் உணவே மருந்து பழக்கத்தை பின்பற்றி நம் வருங்கால சன்னதிகளுக்கும் அதை கற்றுத்தருவோம்.
                          அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய உணவுகளில் முக்கிய இடம் 
பிடிப்பது பழங்கள்.பழங்களில் அன்னாச்சி பழத்துக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு.
அன்னாசிப் பழம்
             அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ‘பி’ உயிர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது ரத்த விருத்திக்கு மிகவும் முக்கியமாகும்.
     நன்றாக பழுத்த அன்னாசிப் பழத்தை சிறு சிறு துண்டுகறாக வெட்டி வெயிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் படுக்க போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஒரு டம்ளர் பாலில்  5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, படுக்க செல்லும் முன் அவற்றை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
     அன்னாசிப் பழத்துடன் தேன் சேர்த்து ஜூஸ் தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு பக்கத் தலைவலி,இருபக்கத் தலைவலி, எல்லாவகை கண் நோய்கள், எல்லாவகை காது நோய்கள், பல் வியாதிகள், தொண்டை சம்மந்தமான நோய்கள், வாய் புண், ஞாபக சக்திக் குறைவு  ஆகியவை குணமாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச்சாற்றை சாப்பிட்டால் குணமடைவார்கள்.
     பெண்கள் முன் கர்ப்ப காலத்தில் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்ற பெரியவர்களின் சொலவடை உண்டு.அதை தவிர்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்னாசிப் பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஏற்றது.

Comments

  1. அன்பின் மகேஸ்வரி - அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. உங்கள் கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சீனா.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்