நாம் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அருள்மொழிகள் மற்றும் பொன்மொழிகள்

     
    With a Yellow Flower                        
                  புத்தாண்டு, பொங்கல் பிறந்தாலே கொண்டாட்டம் தான். இனிப்புகளை பரிமாறி இனிதே புத்தாண்டை வரவேற்கும் இந்த வேளையில், நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய சில அருள்மொழிகளும் , பொன்மொழிகளும்.
அருள்மொழிகள்
        நீ கடவுளை உணர வேண்டுமா ?
        அன்பாயிரு, அறிவாளியாயிரு, உண்மையே சொல்.
 • Ø          சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
 • Ø       பொறுமையாயிரு ஆனால் சோம்பலாயிராதே
 • Ø       சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
 • Ø   அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
 • Ø   இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
 • Ø      கொடையாளியாயிரு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே
 • Ø      வீரனாயிரு ஆனால் போக்கிரியாயிராதே
 • Ø   இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே
 • Ø       பற்றற்றிறு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
 • Ø       நல்லோரை நாடு ஆனால் வெறுக்காதே

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

v  வருவதும் போவதும் இரண்டே  இன்பம், துன்பம்
v  வந்தால் போகாதது இரண்டே  புகழ், பழி
v  போனால் வராதது இரண்டே மானம், உயிர்
v  தானாக வருவது இரண்டே  இளமை, முதுமை
v  நம்முடன் வருவது இரண்டே  பாவம், புண்ணியம்
v  அடக்க முடியாதது இரண்டே  ஆசை, துக்கம்
v  தவிர்க்க முடியாதது இரண்டே பசி, தாகம்
v  பிரிக்க முடியாதது இரண்டே  பந்தம், பாசம்
v  அழிவைத் தருவது இரண்டே  பொறாமை, கோபம்
v  எல்லோருக்கும் சமமானது இரண்டே பிறப்பு, இறப்பு

Comments

 1. பத்துக்கு பத்து நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன்

  ReplyDelete
 2. அருமையான பதிவு....உங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்