நான் படித்தில் பிடித்த என்றும் அழியாத பொன்மொழிகள்

                                    
                                         

 • உண்மைக்காக எதையும் இழக்கலாமே ஒழிய,எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.

 • இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியாகவும் வருவதில்லை.

 • ஒரு பொய்யை உண்மையாக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும்.

 •  அறிவும், ஆராய்ச்சியும் எல்லையற்றவை.

 • எத்தனை கற்றாலும், அனுபவம் மட்டுமே அறிவைத்தரும்.

 •  தன் குறைகளை உணராமல், பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவன் முட்டாள்.

 •  கோபம் வேண்டாமே. அது தடுமாற்றத்தில் ஆரம்பித்து, மன வருத்தத்தில் போய் முடியும்.

 • நடந்தவைகளைப் பற்றி நினைக்காமல் இருந்தாலே நடப்பனவற்றில் பிரச்சனை வராமல் இருக்கும்.

 • வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை தரும்.

 •  தன்னைச் சீர்ப்படுத்தாதவன், பிறரை சீர் படுத்த முடியாது.

 •  கர்வம் படைத்தவன் கல்லுக்குச் சமமானவன்.

 • பகையில்லாதவன் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.

 • அற்ப ஆசைகள் ஆயிரம் முயற்சிகளைக் கெடுக்கும், கோடி தவத்தையும் கெடுக்கும்.

 • வெறும் வார்த்தைகளால் வயிற்றை நிரப்ப முடியாது.

 •  மரணத்தைக் காட்டிலும் கொடியது வஞ்சகம்.

 •  பாவத்தை யார் செய்தாலும் அது அவரது மரணம் வரை முள்ளாய்க் குத்தும்.

 • திருப்தி அடையாதவன் என்றும் வறுமையிலேயே இருப்பான்.

 •  ஆசைகளுக்குச் சமமான நெருப்பு எதுவுமில்லை.

 •  உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.

 •  பேராசை உள்ளவன் உலகம் முழுவதையும் கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டான்.

 • தாய், தந்தையை விட சிறந்த, உயர்ந்த தெய்வம் எதுவுமில்லை.

Comments