டாலர் நகரம் ஜொலிக்கிறது வலைப்பதிவினால் மகுடம்வலைப்பதிவர்களாகிய நாம், வளர்ந்து வரும் மற்றுமொரு மாற்று ஊடகம என்பதை நினைவில் வைத்து பதிவுகளை எழுதி வருகிறோம்.

தினந்தோரும் ஆயிரக்கணக்கான தமிழ் பதிவர்களால் பலாயிரம் பதிவுகள் எழுதி பலரும் பலனடைய  செய்ய வேண்டும் என்பதையே தொழிற்களம் விரும்புகிறது.

அந்த வகையில், பதிவேற்றம் பெரும் படைப்புகளில் சில பொக்கிசங்களாகவும் பாதுகாக்கப்படும் என்பதை உங்கள் பார்வைக்கு கொண்டு வர ஒரு நல்ல மேற்கோளாக ஜோதிஜி அவர்களின் "டாலர் நகரம்" புத்தகம்" அமைந்திருக்கிறது.

சமூக ஆர்வத்துடனான இவரது பயணம் நான்காண்டு அனுபவமாய் வலைப்பதிவுகளில் மிளிர்கிறது. பலரும் அவருடைய பதிவுகளை வாசித்திருந்தாலும் இணையம் சாராத மக்களும் வாசிக்க ஏதுவாய் "தனது டாலர் நகரம்" தொடர் பதிவை புத்தகமாக வெளியிடுகிறார்.

4தமிழ்மீடியா குழுமம் இந்த பெரும் பணியை செய்துள்ளது. இந்த செய்தியின் பொருட்டு ஸ்விச்சர்லாந்தில் இருந்து 4தமிழ்மீடியாவின் ஆசிரியர் திரு.மலைநாடன் அவர்கள் தமிழகத்தில், திருப்பூர் வரை வந்து நம்மையும் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

ஜோதிஜியின் டாலர் நகரம் அற்புதமான ஒரு புத்தகமாக உங்களை வந்து சேரும் என்பதை மட்டும் தொழிற்களம் உறுதியாக நம்புகிறது.

மேலும், வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவுகள் புத்தக வடிவில் அச்சாக வேண்டும் என்ற என்னத்தை தூண்டி இன்னும் நல்ல  படைப்பும், ஆரோக்கியமான போட்டியும் நம்மிடையே உருவாக இந்த் புத்தக வெளியீடு காரணமாக இருக்கும்.

நாளை ( ஜனவரி 27, 2012 ஞாயிறு ) டாலர் நகரம் புத்தகம் திருப்பூர் பல்லடம் சாலையில் டி.ஆர்.ஜி. ஹோட்டல் வளாகத்தில் நடைபெறுகிறது. பதிவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

அவரை தொழிற்களம் சார்பாக வாழ்த்துவோம்.!!!Comments

 1. படிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்... எனதருமை அன்பருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. டாலர் நகரம் புத்தக வெளியீடு விழா சிறக்கவும் ,உங்களின் முயற்சி வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமை நண்பர் திரு ஜோதிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்