மாணவர்களுக்காக பகுதி -4புதியதலைமுறை அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப்பணிகளைப் பற்றி சென்ற  பதிவில் எழுதியிருந்தேன்,அதனை படிக்காதவர்கள் படிக்க  சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-1 

மேலும் புதியதலைமுறை அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப்பணிகளைப் பற்றி இந்த  பதிவில் பார்க்கலாம் 

புதியதலைமுறை வாசகர் வட்டம்:


 •  புதியதலைமுறை  வாசகர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டது புதியதலைமுறை வாசகர் வட்டம்.
 •  புதிய தலைமுறை அறக்கட்டளையின் உறுப்பினராக இணைவதன் மூலம் தாங்களும் சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை செய்ய இயலும்.

  விதைகள்:               

 •   நீங்கள் வளரவும்,உங்களில் பல விழுதுகள் வேறூன்றவும்   புதிய தலைமுறை அறக்கட்டளையால் துவங்கப் பட்டது இந்த விதைகள் என்னும் திட்டம்     
 • தற்போது விதைகள் திட்டம் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது.

 • விதைகள் திட்டத்தின் மூலம் புதிய தலைமுறை அறக்கட்டளை என்ன செய்தது:

 • விதைகள் திட்டத்தின் மூலம் புதிய தலைமுறை அறக்கட்டளை என்ன செய்தது:படித்து முடித்து விட்டு,வேலை வாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து,அவர்களுக்கு ஒரு தொழிலை கற்றுகொடுத்து,அவர்களுக்கு ஒரு குழுவாக செயல்பட வைத்து,ரெப்கோ வங்கியின் மூலம்  கடன் உதவி பெற்று,படித்து முடித்த இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கின்றது.

 • விதைகள் திட்டத்தில் இணைந்து பயன் பெற,அதற்குரிய தகுதிகள் 

 சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பு,வளர்ச்சித்திட்டம்:[SEEDS-Self Enterpreneur,Employment Development Scheme]: • படித்து வேலைவாய்ப்பற்ற,பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள,சுய தொழில் செய்து கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும்,விடாமுயற்சியும் கொண்டு,குழுவாக இணைந்து விதைகள் திட்டம் மூலம் பயன் பெறுங்கள் 
 • சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா ?
 • படைக்கும் திறன் ,புதுமை எண்ணம் கொண்டவரா ?
 • சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமா ?
 • தொழில் முனைவோர் ஆக வேண்டுமா?
 • வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டுமா?

     விதைகள் திட்ட உறுப்பினர் தகுதிகள்:     

 • 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள்,பெண்கள் 
 • திறன் மேம்பாட்டு பயிற்சி,தொழில் முனைவோர் பயிற்சி பெற விருப்பம் உடையவர்கள் 
 • குழுவோடு இணைந்து துடிப்புடன் செயல்படும் தன்னார்வம் உடைய நபர்கள் 
 • கல்வி தகுதி எதுவும் இல்லை 
 • ஒரே பகுதியில் வசிக்கும் நபர்கள் 

 நிறுவனம் அளிக்கும் பயிற்சிகள்:

 • உறுப்பினர் பயிற்சி 
 • உறுப்பினர் பிரதிநிதி பயிற்சி 
 • தொழிற்பயிற்சி 
 • ஆளுமை திறன் மேம்பாடு 
 • வாழ்வாதாரப் பயிற்சி 
 • களப் பயிற்சி

விதைகள் திட்டத்தில் இணைந்து பயன் பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள :

புதிய தலைமுறை அறக்கட்டளை,
நம்பர்:24,ஜி.என் செட்டி ரோடு, சென்னை-600 017,
தொலைபேசி:  044-28341219,044-3057 87533
கைப்பேசி: 8754417500
மின்னஞ்சல்: contact@ptfindia.org


இந்த பதிவை பகிர அனுமதி தந்த நண்பர் வேலுக்கு நன்றி : http://velkr.blogspot.in/2012/12/blog-post_30.html

Comments