தெரிந்து கொள்ளுங்கள் - பகுதி 6



கடந்த பகுதிகளில் சில பொது அறிவு தகவல்கள் பார்த்தோம் . இந்த பகுதியில் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம் . இதில் உள்ள தகவல்கள் உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்த படித்த தகவல்களை இங்கே பதிகிறேன் .
கடந்த பகுதிகளை பார்க்க :
  தெரிந்து கொள்ளுங்கள் - பகுதி 1

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 2

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -3

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -4 

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -5

 


* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.


* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

* உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.

* புத்தர் பிறந்த இடம், லும்பினி.

* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.

* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா).

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.

* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.

* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

*`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

* சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.

* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.

* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி.

Comments

 1. நல்ல பயனுள்ள பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 2. நல்ல பயனுள்ள தொடர், நன்றி

  ReplyDelete
 3. வேண்டும் ஐயா. நான் பாக்யா வார இதழில் இரண்டு பிரபல பகுதி தொடர்ந்து எழுதி வருகிறேன். அது தவிர பிரபல வார இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், கவிதை எழுதி வருகிறேன். தொழிற்களத்தின் உதவி ஆசிரியர் பணி என் கனவை நினைவாக்கும்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்