வீட்டு மருத்துவம்
சிறு சிறு வியாதிகேல்லாம் நாம் மருத்துவரை பார்க்கிறோம் . ஆனால் நமது தாத்தா , பாட்டி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் டாக்டரிடம் போக மாட்டார்கள் . காரணம் அவர்கள் வீட்டிலேயே சில மருந்துகள் செய்வார்கள் . இதற்க்கு வீட்டு மருத்துவம் அல்லது கை மருந்து என பெயர் . அதுபோல உள்ள எளிய சில வீட்டு மருந்துகளை இங்கு பார்க்கலாம் .
 


கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். 


பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம். சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.


குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.


காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.


கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். 

மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது. உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது.இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. 
வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.

டிஸ்கி : இது முக புத்தக நண்பர் கார்த்திகேயன் மதன் அவர் பக்கத்தில் பகிர்ந்தது .

Comments