தமிழனின் பெருமை கூறும் பொங்கல் பண்டிகை

          நமது தமிழர் பண்பாட்டின் பெருமைகளை பண்டிகைகள் சொல்கின்றன. நாம் கொண்டாடி வரும் ஒவ்வொரு தமிழர் விழாவிற்கும் ஒரு குறிப்பிட்ட காரணத்தை குறித்து நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். 

விழாவின் மகிமையையும், தமிழரின் பெருமையையும் நமது தலைமுறைகளில் மறந்து விட்டோம். 

நாம் கொண்டாடி வரும் விழாக்கள், ஒன்றிலிருந்து மற்றொரு விழாவுக்கு தொடர்ந்து ஒரு நூலிழை ஒட்டிக்கொண்டு இருக்கும்படி நம் முன்னோர்கள் ஒவ்வொரு விழாவையும் உருவாக்கி இருந்திருக்கிறார்கள்.

ஆம், 

        விநாயகர் சதூர்த்தி விழா, கார்த்திகை திருநாள், பொங்கல் என்று ஒவ்வொரு விழாவும் மற்றொன்றோடு தொடர்பு கொண்டுள்ளது.

உங்களுக்கு தெரியும், நம் முன்னோர்களின் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், தொழில்கள் என்று,,,

அந்த வகையில் களிமண்ணை கொண்டே பெரும்பாலும் பாத்திரங்கள் மற்றும் பண்டங்கள் செய்துவந்திருக்கின்றனர். 
        ஒரு மண்ணை  பதம் பார்ப்பதற்கு முதலில் கைப்பிடி அளவு மண்ணை அள்ளி கஈயில் இருக பிசைந்து பார்ப்பார்கள். அந்த மண் இருகி பிடித்தமாக இருந்தால் அந்த மண்ணின் தன்மை சரியாக இருக்கிறது என்று கணித்துவிடுவார்கள்.
எனவே தான்  எந்த ஒரு பண்டிகையின் போதும் முதலில் விவசாயத்திற்கும், மண்ணிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கைப்பிடி மண்ணை இருக்கி பிள்ளையாராக  பிடித்து வைத்தார்கள். 

ஒரு வீடு கட்டும் போது முதலில்   கட்டப்பட இருக்கும் நிலத்தின் மண்ணை இப்படி பிள்ளையாராக பிசைந்து முன்னுரிமை கொடுத்திருந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பாருங்களேன்,

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனித்துவம் நமது  தமிழ் மாதங்களில் உண்டல்லவா?

விநாயகர் சதூர்த்தி :

-   கைப்பிடி மண்ணை பிசைந்து பக்குவம் பார்த்து விதைக்கும் காலத்தை  தீர்மானிக்க இந்த மாதத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்

கார்த்திகை திருநாள் :

     சரியான பதமுள்ள மண்ணை கொஞ்சமாக பக்குவ்வப்படுத்தி சிறிய விளக்குகள் செய்து பார்த்து சரியான  தட்பவெப்ப நிலையை உணர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் வரப்போகும் சீதோசன  நிலை மாற்றத்திற்கு ஏற்ற முன் நடவடிக்கைகளை செய்திருக்கிறார்கள்

பொங்கல் விழா :

       சிறிய விளக்கு இப்போழுது பெரிய பானையாக செய்யப்பட்டிருந்தால். விளைச்சலும் அந்த அளவிற்கு மண்ணில் வந்திருக்கும். இதை குறித்து வணிகமும், வாழ்வும் அமைந்திருக்கிறது. இப்படி ஆறு மாதங்களின் உழைப்பை கெளரப்படுத்தி அதற்காக உழைத்த உழவு, மாடுகள் போன்றவற்றையும் சேர்த்தே நமது முன்னோர்கள் விழாவை உருவாக்கி கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

     இன்றைக்கு இத்தகைய விழாக்கள் எல்லாம் தொலைக்காட்சிகளிலும், தியேட்டர்களிலும் மட்டுமே கொண்டாடும்  அளவிற்கு நம் தலைமுறைக்கு வாய்ப்புகள் மாறிவிட்டன.

இயற்கையோடு வாழ்ந்து வளம் பெற முடியாமல், இயந்திரங்களை உற்பத்தி செய்து நமது தலைமுறைகள் எங்கே போய் சந்தோசங்களை தேடப் போகிறோம்?

    இந்த பொங்கல் திருநாளை உறவுகளோடு இனிதே கொண்டாடி நம்  முன்னோர்களை நினைவு கூறுவோம்.

தொழிற்களத்தின் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!!

-- அருணேஸ்

Comments

  1. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தமிழர் திருநாளாம்,பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்