சூப்பர் ஸ்டார் தேவையில்லை… பவர் ஸ்டாரே போதும்… – இயக்குனர் அதிரடி :


நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தின் 50வது நாள் வெற்றி விழா இன்று சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன், கேயார், விமல், தயாரிப்பாளர்கள் சிவா, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன் ஒரு சுமாரான படம் சூப்பர் ஹிட் படமாகணும்னா சூப்பர் ஸ்டார் வேணும் என்று குறிப்பிட்டார். 

இதைத் தொடர்ந்து பேசிய கேயார், பார்த்திபன் பேசியதைச் சுட்டிக் காட்டி, ‘இனிமே சுமாரான படம் சூப்பர் ஹிட் படமாகணும்னா சூப்பர் ஸ்டார் தேவையில்லை… பவர் ஸ்டாரே போதும்… காரணம் படங்கள் இப்போது நன்றாக இருந்தால் மட்டுமே ஓடுகின்றன. மற்றபடி யார் நடித்திருந்தாலும் படம் நல்லாயில்லை என்றால் ஓடுமா என்ன? நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தின் டைட்டிலை முதன் முதலாக கேட்டதுமே, அட என்னடா இது புதுசா இருக்கே டைட்டிலை இப்படி வெச்சிருங்காகங்களேன்னு நெனச்சேன்… ஆனால் அதற்கு அப்புறம் வந்த விளம்பரங்கள் படத்தில ஏதோ விஷயம் இருக்குங்கிறதை சொல்லியது. ‘என்னது சிவாஜி செத்துட்டாரா…?‘ என்ற டீசரை இவர்கள் வெளியிட்ட போதே இந்த படம் வெற்றியடையும் என்று நினைத்தேன்… இன்று இந்தப் படத்தின் 50வது நாள் வெற்றி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படம் இதையும் தாண்டி 100 நாட்களை தொடவேண்டும்…’ என்று பேசினார்.


நன்றி : சினிமா 360 facebook page

Comments

  1. பகிர்வுக்கு நன்றி! செய்தி கேள்விப்பட்டதுதான்!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்