லட்டு சுட்டதுதான் : நடிகர் சந்தானம் பேட்டிகாமெடி நடிகர் சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் நவீன் சுந்தர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், சந்தானம் மற்றும் க.ல.தி.ஆ. படக்குழுவிடம் இது பற்றி விசாரித்தோம்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ எங்கேயோ சுட்டு எடுக்கப்படும் படம்தான் என்பதை ஒப்புக்கொண்ட அவர்கள், “ஆனால், இந்த உதவி இயக்குனரிடம் சுடவில்லை” என்கிறார்கள்.

உண்மையில் இது டைரக்டர் பாக்யராஜ் இயக்கத்தில் 1980களில் வெளியான வெளிவந்த ‘இன்று போய் நாளை வா’ படத்தை தழுவி எடுக்கப்படுகிறது என்கிறார்கள்.“அந்த கதையை தற்போதைய காலத்துக்கு மாற்றியிருக்கிறோம். உதாரணமாக ஒரிஜினல் படத்தில் ராதிகாவை கணக்கு பண்ண பாக்யராஜின் நண்பர், ஹிந்தி கற்றுக்கொள்வார். இதில் பவர் ஸ்டார் நாட்டியம் கற்றுக் கொள்கிறார். அப்படி சம்பவங்கள் மாற்றப்பட்டு உள்ளன. ஆனால் தீம், ‘இன்று போய் நாளை வா’ படத்தின் தீம்தான்” என்றும் சொல்கிறார்கள்.


தெருவுக்கு புதிதாக குடிவந்த ஹிந்தி வாத்தியார் பொண்ணை (ராதிகா) பாக்கியராஜூம் இரு நண்பர்களும் (பழனிசாமி, ராம்லி) போட்டி போட்டுக்கொண்டு சைட் அடிப்பதுதான், ‘இன்று போய் நாளை வா’ படத்தின் தீம். அதை அப்படியே வைத்துக்கொண்டு இதில், பவர் ஸ்டாரை வைத்து கலாய்ப்பதையே பெரும் பகுதியாய் கொண்டு படத்தினை உருவாக்கியிருப்பதாகவும், இதற்கான முறைப்படி அனுமதியை அந்த படத்தின் தயாரிப்பு தரப்பிடம் இருந்து பெற்று, டைட்டிலில் தாங்க்ஸ் கார்டெல்லாம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.


“இந்த அசிஸ்டென்டை டைரக்டர் இந்த கதைக்கு உரிமை கோர வேண்டுமென்றால், பாக்கியராஜிடம்தான் போய் கேட்க வேண்டும்” என்கிறார்கள் இவர்கள்.இதற்கிடையே மற்றொரு ட்விஸ்ட்.தான் 80களில் கதை எழுதி நடித்த ‘இன்று போய் நாளை வா’ படத்தை, தனது மகன் சந்தனுவை வைத்து ரீமேக் பண்ணும் ஐடியாவில் இருந்திருக்கிறார் பாக்கியராஜ்.‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை இதுதான் என்பது, இன்று போய் நாளை வா படத்தின் இயக்குநர் பாக்யராஜூக்கே தெரியாதாம். அவரும் ட்ரைலரைப் பார்த்துதான் இது நம்ம கதை மாதிரி இருக்கே என விசாரித்தபோது, ஆமாம் என்ற பதில் கிடைத்ததாம்.அவர் கோவித்துக் கொண்டு மூன்று சங்கங்களிலும் முறையிட்டுவி்ட்டு இருக்கிறார். இப்போது அவரை சாந்தப்படுத்தும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

நன்றி : விறுவிறுப்பு .com

இதயும் படிக்கலாமே :

மாணவர்களுக்காக - பகுதி 2( உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?)

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?


 

Comments