இலக்கை அடைந்த விழா! - தொழிற்களம் டிசம்பர் 30 விழா பதிவு

டிசம்பர் 30, 2012 ஞாயிறு,

         வலைப்பதிவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட  தொழிற்களம் மற்றும் தமிழ்மீட்சி இயக்கம் இணைந்து நடத்திய "தமிழ் உறவோடு உறவாடுவோம்" என்ற சிறப்பு கருத்தரங்க விழா எண்ணிய இலக்கை சரியாக அடைந்தமைக்கு விழாவில் முன்கூட்டியே வந்து கலந்துகொண்ட பதிவர் நெஞ்சங்கள் தான் முதன்மையான காரணம்.

       "15 வருடங்களுக்கு பிறகு நான் கொஞ்சம் சோர்வு தட்டி போயிருந்தேன். இனி எங்கள் பயணம் எதை நோக்கி இருக்கும், எங்களின் எதிர்காலம் என்ன? என்றெல்லாம் கவலையோடிய எமது நாட்களை, தொழிற்களம் டிசம்பர் விழாவானது  பறந்தோடிட செய்து எம்மை மீண்டும் ஒரு இளைஞனாய் உற்சாகமடையச் செய்தது"

    என்று நெஞ்சுருகி திருப்பூர், தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் திரு.கு.தங்கராசு  அய்யா அவர்கள், நமது தொழிற்களம் அலுவலகத்திற்கு விழா முடிந்த மறுநாள் வந்திருந்து சொன்ன வார்த்தை ஒன்றே இந்த விழா தனது இலக்கை சரியாக அடைந்தது என்பதற்கு சரியான சான்றாக இருக்கும்.


    என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் முன்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.


சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து துவங்கினோம்.

        பொதுவாக குறுந்தகட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை போட நாம் ஒலிப்பெருக்கி காரரிடம் சொன்னபோது உடனே குறுக்கிட்ட பள்ளியின் தாளாளர், "நாமே பாடுவோம், இப்படி ஒலிபரப்பியே நமக்கு பாடும் பழக்கம் குறைந்து விட்டது" என்று கூறி, பள்ளியின் ஆசிரியர்களை மேடைக்கு கூப்பிட்டார்.

அங்கேயும் சரியாக கவனிக்கும் படியாக, பள்ளியின் ஆசிரியர்கள், அனைவரையும் எழுந்திருக்க பணித்தார்கள்.

அனைவரையும் நோக்கி, இருகரங்களையும் ஒன்றாக கூப்பி வணங்க நிற்க சொல்லி, மெலிதான குரலில் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட துவங்கி வைத்தார்கள்.     பிறகு, மேடையில் வரிசையாக, ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் திறமைகளை காட்ட துவங்கியதுமே அதுவரை இருந்த ஒரு விதமான அமைதியான சூழல் கலைந்து உற்சாகமாகி விட்டது அரங்கம்.

ஆம், நம் தமிழ் வழி குழந்தைகள் பேசிய பேச்சுகள், அவர்களின் நடனங்கள் அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதிலும் ஒரு வித பிரம்மிப்பை உண்டாக்கின.

கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து  கருத்தரங்கம் தயாராகியது.

ஒவ்வொரு சிறப்பு பேச்சாளர்களையும் தன் இனிய குரலால் மேடைக்கு அழைத்து விழா தொகுப்பாளராய் பதிவியேற்றார் பதிவர் கண்மணி அன்போடு,பதிவர் சொக்கலிங்கம், கோவை மு.சரளா, மதுமதி, சமூக ஆர்வலர் க.ஈஸ்வரன், மதுரை பொற்கை பாண்டியன் என்று சிறப்பு பேச்சாலர்கள் மேடை ஏறினர். தொடர்ந்து சிறப்பு அறிமுக உரைக்காக தமிழ் மீட்சியை சேர்ந்த அன்வர் ஷாஜி, தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.தங்கராசு மற்றும் நமது தொழிற்களத்தின் நிறுவனர் மக்கள் சந்தை சீனிவாசன் அவர்களும் மேடையில் தலைமை வகித்தனர்.


விழா கருத்தரங்க பேச்சாளர்களின் உரைகள் பார்க்க (காணொளிக்கு) ( பதிவுக்கு)

    விழாவின் சிறப்பு நாயகனாக மதுரை மாவட்ட முன்னாள் ஆச்சியரும் தற்போதைய கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குனருமான

திரு.உ. சகாயம் இ.ஆ.ப. அவர்கள் சரியாக 5.00 மணிக்கு விழா மேடையை அடைந்து சிறப்பித்தார். உடன் தமிழ் மீட்சியின் மாநில செயலாளரான நந்தகோபால் அய்யாவும் உடன் வந்தார்.

      அவர் வரவேற்புக்குள் நுழைந்ததுமே, அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து  நின்று ஒரு சேர கைதட்டி, உற்சாகத்துடன் வரவேற்ற கனம் உண்டாக்கிய புத்துணர்வை அந்த அரங்கத்தில் இருந்தவர்களால் மட்டுமே உணர்ந்திருக்க முடியும்.

சகாயம் என்ற தனி மனிதனை விட, அவர் நேர்மைக்கு கிடைத்த  மரியாதை அது என்பதை அவர்தம் அரைமணி நேர உரையில் தெளிவாக உணர்த்திவிட்டார்.நெஞ்சை நிமிர்த்தி, கைகளை அசைத்து கம்பீரமான அவரின் பேச்சு நடை குழந்தைகளுடன் சேர்த்து கூட்டத்தின் கவனத்தையும் வெகுவாகவே  கட்டிப்போட்டது.

உ.சகாயம் இ.ஆ.ப. அவர்கள் பேசிய உரை பார்க்க ( காணொளி ) ( பதிவு )

     மேலும் சகாயம் அவர்களின் பார்வைக்காக, சிறப்பு நடனமாக யோகா நாடனம் மற்றும் குச்சிப்புடி நடனம் சகாயத்துடன் வந்திருந்த அவரது துணைவியரையும் வெகுவாகவே ஈர்த்தது. "இன்னும் கொஞ்ச நேரம் இவ்விழாவை காணலாமே" என்று  அவர் காதில் சொன்னார்.

இந்த விழாவின் ஆரம்பம் முதல் இறுதி வரை, விழாவை கட்டமைத்து ஒருங்கிணைத்து கொண்டிருந்தார் தொழிற்களம் நிர்வாக இயக்குனர் அருணேஸ்.


        காலை 11 மணியிலிருந்தே பதிவர்கள் முதல் ஆளாய் வந்திருந்து மாலை 6.00 மணி வரை நிதானமாகவும், ஆர்வமாகவும் இருந்து சிறப்பித்தனர். 

     வலையகம் அகரன் அவர்கள் நேரலையில் விழா நிகழ்வுகளை ஒளிபரப்ப உதவி செய்தார், வீடு சுரேஸ், தேவியர் இல்லம் ஜோதிஜி, அட்ராசக்க சி.பி.செந்தில்குமார், ஆகாய மனிதன் யுவராஜ், தூரிகையின் தூரல் மதுமதி, கோவை கமல், நா.மணிவண்ணன், திண்டுக்கல் தனபாலன், விஜயன், செழியன், திடம்கொண்டு போராடு சீனு, ஜீவன் சுப்பு, இனியவை கூறல் கலாகுமரன், கோவை மு.சரளா, சின்ன சின்ன சிதறல்கள் அகிலா, வெயிளான், கார்த்திகேசன், த,சந்திரராஜன், தமிழ்பேரன்ட் சம்பத்குமார், பரிசல் காரன், மோகன் சஞ்சீவன், பதஞ்சலி ராஜா, கலையரசன், சிவகாசிக்காரன் ராம், அழகு நிலா, சரவண பிரகாஷ் ஆகிய வலைப்பதிவர்கள் விழா நேரத்திற்கு முன்கூட்டியே வந்திருந்திருந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர். ( விடுபட்டவர்கள் பெயர்களை தெரிவிக்க )
     மேலும், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் தங்கள் பங்கிற்கு விழாவை கவனித்துக்கொண்டிருந்தனர்.

மதுரை, உடுமலை, கோவை, ஈரோடு, கோபி, சென்னை, பல்லடம், சிவகாசி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் என்று பல ஊர்களில் இருந்தும் நண்பர்கள் அழைப்பை ஏற்று வந்ததை பெருமையுடன் கருதுகிறோம்.

குறைந்த காலத்தில் திட்டமிடப்பட்டு ( 17 நாட்களில் ) இவ்விழாவை நடத்தி இருந்தாலும் சரியாக தன் இலக்கை அடைந்தது என்று தைரியமாக கூறலாம்.

     கிட்டத்தட்ட 52 ஆயிரம் ரூபாய் "தமிழ் உறவோடு உறவாடு" விழாவில் குழந்தைகளுக்கு நிதியாக அன்றைய தினம் கிடைத்தது. அதிலும் குறிப்பாக 

தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு மட்டும் (ரூ.33000) முப்பத்தி மூன்று ஆயிரம் ரூபாய் அந்த மூன்று  மணி நேரத்தில் கிடத்தது. ( நிதி கொடுத்தவர்களின் விபரங்கள் பார்க்க )
"எனக்கு இப்போது இந்த குழந்தைகளையும் பள்ளியையும் பார்க்கும் பொழுது தைரியம் வந்து விட்டது. என் தமிழ் இன்னும் சிறப்பாக நாளைய தலைமுறைகளுக்கு சென்று வளரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது  " என்று சொன்ன சகாயம் அவர்களின் உணர்ச்சி எழுச்சியாக எம்மையும் உற்சாகப்படுத்தியது.

நமது தொழிற்களம்  நடத்திய இவ்விழாவில்\

கண்டோம்! களித்தோம்! சென்றோம்!! என்றில்லாமல் ஒரு அற்புதமான பள்ளியை உலகறிய செய்ததன் மூலம் இவ்விழாவை நடத்தியதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

     விழாவிற்கு வந்திருந்த வலைப்பதிவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை தொழிற்களத்தின் சார்பாக நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

- தொழிற்களம் குழு

Comments

 1. நேரில்காண வாய்ப்பு அடியேனுக்கு இல்லை. இப்பொழுது படித்தும்,பார்த்தும் தெரிந்து கொண்டேன். நேரலை பற்றிய விபரம் தெரியாது. பணி தொடரட்டும்...

  ReplyDelete
 2. எதுக்கும் ஒரு குடுப்பினை வேணும்னு சொல்லுவாங்க, பக்கத்துல இருந்தும் போக முடியாத நிலைமை, வாழ்த்துக்கள், வளருங்கள்

  ReplyDelete
 3. சகாயம் அவர்களுடன் சந்தித்து பேச முடிந்தது . அதற்கு நன்றி!.

  ReplyDelete
 4. திரு.சகாயம் அவர்களின் உரை சுட்டி வேலை செய்யலை.. வேறு எங்கோ போகிறது சரி செய்யவும்

  ReplyDelete
 5. அன்பின் தொழிற்களக் குழுவினரே

  தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் ( நிதி கொடுத்தவர்கள் விபரம் ) சுட்டி வேலை செய்ய வில்லை. சரி செய்யவும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 6. நேரின் வர முடியவில்லை. உங்களது விழா பற்றிய பதிவுகளைப் படித்து ஆறுதல் அடைகிறேன்.
  உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. இப்போதாங்க,எந்த்ரிச்சி உக்காந்து இருக்கேன் நல்லா, திரும்பும் போது பேருந்தில் பக்கத்துல இருந்த ஆள் கொடுத்த பரிசு டெங்கு காய்ச்சல், என்ன பத்தியும் சொன்னதுக்கு நன்றி

  ReplyDelete
 8. வார்த்தைக்கு வார்த்தைக்கு,சாப்டியா ,சாப்டியா அப்டின்னு அன்போடு கேட்டு வாகனத்திலே கூட்டிச் சென்ற அருண் அண்ணாக்கு நன்றி

  ReplyDelete
 9. தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. விழாவில் என் வயதை ஒத்த பெண் பதிவர்கள் யாரையுமே காண இயலவில்லை! பெண்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று எனக்கு வருத்தம்.

  இனியும் இனைந்து நிறைய செய்யலாம் நாம்.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்