வெற்றிகரமாக நடந்த "உறவோடு உறவாடுவோம் "

நன்றிகள் :
"உறவோடு" உறவாடிய உறவுகள் அனைவருக்கும் தொழிற்களத்தின் நன்றிகள்

 நம் "மக்கள் சந்தை டாட் காம்-ன் தொழிற்களம் மின்னிதழ் "  மற்றும்  
"தமிழ் மீட்சி இயக்கம்" இணைந்து நடத்திய " தமிழ் உறவோடு உறவாடு" நிகழ்ச்சியில் பதிவுலக நன்பர்கள்,வலைப்பதிவர்கள் ,குழந்தைகள் ,பொதுமக்கள் என பல்வேறு உறவுகள் கலந்து கொண்டு "உறவோடு விழா" சீராக ,சிறப்பாக நடைபெற பெரிதும் உதவினர் .இவ்விழா சிறப்பாக நடைபெற காரணமான அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தொழிற்களம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது .

 வெற்றிகரமாக நடந்த "உறவோடு உறவாடுவோம் ":

 2012 டிசம்பர் 30-ம் நாள் நமது "மக்கள் சந்தை டாட் காம்" மற்றும் "தமிழ் மீட்சி இயக்கம் " சார்பில் மிகச்சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு  திருப்பூர் கருப்ப ராயன் கோவில் திருமண மண்டபத்தில்  அனைவரும் எழுந்து நின்று "தமிழ்த்தாய் வாழ்த்து " பாடி தமிழ்த்தாயை வணங்கி "உறவோடு" நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தனர் .இதன் பின்பு "தாய் தமிழ் பள்ளியை" பற்றியும்,விழா பற்றியும்  அறிமுக உரை அளிக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து தாய் தமிழ் பள்ளி மழலைகளின் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின

 விழாவை சிறப்பித்த சிட்டுகள் :

இவ்விழா சிறப்புற அமைய தாய் தமிழ் பள்ளிக் குழந்தைகளின் பங்கு முக்கிய பங்காகும் , சிறு சிட்டுக்களின் பேச்சு ,கவிதை,ஆடல் ,பாடல் என்று அரங்கமே நிறைந்து இருந்தது .தாய் தமிழ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் மற்ற பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகளில் இருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தது கவனிக்க தக்கது ,திரை இசை பாடல்களுக்கோ ,ஆங்கில பாடல்களுக்கோ (Rhymes) அங்கே இடமில்லை .
குழந்தைகள் பேசும் போது தமிழின் இனிமை பலமடங்கு கூடிவிடுகிறது போலும் ..!,மழலை தமிழ் பேச்சுகள் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன .அச்சமில்லை அச்சமில்லை ...என்ற பாரதி பாடலை மறுவடிவம் செய்து "வெட்கமில்லை ,வெட்கமில்லை..." என்ற பாடல் மூலம் தமிழ் பற்றில்லாத தமிழ்ர்கள் நிலைபற்றி சுட்டினர் .தமிழின் பெருமையையும்,தமிழ் தம் அருமையையும் அந்த சிட்டுகள் அழகாக கூறின ...


ஆடல் ,பாடல் நிகழ்ச்சிகளில் பரதம் ,சிலம்பம்,கரகாட்டம்,கோல் -குச்சி ஆட்டம் ,சக்கை -குச்சி ஆட்டம் என்று தமிழின் பாரம்பரிய நடனங்களை ஆடினர் .அந்த சிறு பட்டாம்பூசிகள் சிறகடித்து நடனமாடியதை கண்டு அதை பார்த்தவர்கள் மனமெல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்து விட்டது .
கருத்தரங்கம் :
 தமிழ் மீட்சி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு அன்வர் ஷா கருத்தரங்கத்தை துவக்க உரையாற்றி துவக்கி வைத்தார் .

  திருப்பூரில் பனியன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் திரு. சொக்கலிங்கம் அவர்கள் இயற்கையும்தனிமனித ஒழுக்கமும்!  என்ற தலைப்பில் - உரையாற்றினார் ,ஒழுக்கம் என்பது மனிதனின் இயற்கையாக வேண்டும் என்று இவர் குறிப்பிட்டார் ,
  
கிரானைட் கல் ஏற்றுமதி தொழிலதிபரான திரு. பொற்கை பாண்டியன் அவர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - என்ற தலைப்பில் உரையாற்றினார் அந்த காலத்திலேயே தமிழன் அயல் நாடுகளிடையே வர்த்தக தொடர்பில் இருந்தமை பற்றியும் ,தொழில் முன்னேற்றத்திற்கும் மொழிக்கும் உள்ள தொடர்பை பற்றியும் உரையாற்றினார் ,-
  
சமூக சேவகர் திரு. ஈஸ்வரன் அவர்கள் சுதந்திரமும் நம் சமூக பங்களிப்பும்!
என்ற தலைப்பில் உரையாற்றினார் ,இவர் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார் ,இவர் திருப்பூரில் லஞ்சம் சார்ந்த முறைகேடுகளில் ஈடுபட்ட பல நபர்களை கண்டுபிடித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைப்பாளராகப் பணி புரியும் திருமதி கோவை.மு.சரளா அவர்கள் தமிழ் என் அடையாளம்! என்ற தலைப்பில் உரையாற்றினார் ,தமிழ் மொழிக்கல்வியின் சிறப்பையும் அவசியத்தையும் எடுத்து கூறும் விதத்தில் இவரது பேச்சு அமைந்திருந்தது .
சகாயம் ஐயா அவர்களின் உரை

மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர் திரு..சகாயம் ஐய அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார் , அவரை வரவேற்று "மக்கள் சந்தை" நிறுவனர் சீனிவாசன் ஐயா அவர்கள் வரவேற்புரையாற்றினார் .தாய் தமிழ் பள்ளியின் தலைமை தாளாளர் கு..தங்கராசு ஐயா அவர்கள் உரையாற்றினார் .தாய் தமிழ் பள்ளிக்கு ,தமிழ் மீட்சி இயக்கம் ,தமிழ்ச்செடி அமைப்பு மற்றும் சில நள்ளுள்ளங்கள் நன்கொடைகள் வழங்கின .

இதன் பிறகு சகாயம் ஐயா அவர்கள் பலத்த கைதட்டல்களின் இடையே உரையாற்றினார் .உணர்ச்சியும் ,உற்ச்சாகமும் ஊட்டும் வண்ணமாக அவரது உரை இருந்தது .தமிழ் மொழியின் சிறப்புகளையும் ,பெருமைகளையும் உணர்த்தும் வகையில் அவரது பேச்சு இருந்தது ,

 "ஆங்கில மொழியை கற்று கொள்வோம் தமிழ் மீது பற்று கொள்வோம்" ,
"ஆங்கிலத்தை வாசிப்போம் தமிழை சுவாசிப்போம் "

 என்று அவர் கூறிய போது அரங்கமே கர ஒளியால் அதிர்ந்தது .சகாயம் ஐயாவின் உரைக்கு பின்பு "ரமண மகரிஷி ஆஸ்ரமத்தை " சேர்ந்த மாணவ மணிகளால் யோகாசன -நடன நிகழ்ச்சியும் தாய் தமிழ் பள்ளி மாணவ மணிகளின் சக்கை-குச்சி நடனமும் நடைபெற்றது .
சகாயம் ஐயா அவர்கள் மாணவர்களை பாராட்டினார் .

நிகழ்ச்சியின் நிறைவின் போது தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடினர் ,அதன் பிறகு அனைவரும் சேர்ந்து ஒரு குழு நிழற்படமும் எடுத்துக்கொண்டனர்.

மகிழ்ச்சியும் ,நெகிழ்ச்சியும் ஏற்படுத்தி நம் "உறவோடு-உறவாடுவோம் " நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதுComments


 1. வெற்றிகரமாக நடந்த "உறவோடு உறவாடுவோம் " விழாவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. கவனிக்க களமே பதிவு..? கள்... விஜயன் உங்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனக்கும் முன்னரே ஏன்...? உங்களுக்கும் முன்னதாக...? வாழ்த்துரை வழங்கிய ராஜி அக்காவுக்கும் நம் குழுவினரின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நிகழ்ச்சியை நேரில் கண்டதைபோல இருக்கிறது உங்கள் பதிவு.
  மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்