கிண்டல் 1, கேவலம் 1

ஒரு கிண்டலான செய்தி மற்றும் ஒரு கேவலமான செய்தி உங்களுக்காக .

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்...

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்)...

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)...

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க...

அமெரிக்க அதிகாரிகள் "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க...

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க...

இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ்...!
==============================================================

உலகிலேயே மிக கேவலமான 10 மனிதர்களின் பட்டியலை உலகின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது...

முதலிடத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனும் இரண்டாம் இடத்தில் ஆண்டிமுத்து ராசாவும்(Spectrum Raja) இடம் பெற்றுள்ளனர். மேலும் ராசா இந்தப்பட்டியலில் தெரிவானதற்கு ரைம்ஸ் இதழ் தெரிவித்துள்ள காரணம்...

இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கின்றது இந்த மெகா ஊழல். இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்கு காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும் சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித்துறைக்கே உரிய நத்தை வேகத்தில்
இந்த வழக்கு நடக்கிறது...! என்று ரைம்ஸ் இதழ் வேதனை புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழனின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்ற இந்த மகானுக்கு நன்றி சொல்ல வார்த்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை...!
:நன்றி  facebook

Comments