இயற்கை சாதனை... ஹெக்டேருக்கு 108.8 டன்.. உருளை!


உருளைக்கிழங்கு விவசாயத்தில் உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை நெதர்லாந்து நாட்டு விவசாயிகள் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 45 டன் மகசூல் கண்டது உலக சாதனையாக இருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், தார்வேஷ்புரா கிராம விவசாயி நிதிஷ்குமார், இயற்கை உரங்களை பயன்படுத்தி ஒரு ஹெக்டேர் நிலத்தில் 72.9 டன் உருளைக்கிழங்கு எடுத்ததன் மூலம், முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.

இந்த ஆண்டில், அதே நாளந்தா மாவட்டத்தின் சோதிக் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராகேஷ்குமார் முறியடித்துள்ளார். ஒரு ஹெக்டேர் நிலத்தில், இயற்கை விவசாயம் மூலமாக 108.8 டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்துள்ளார்.
இவர், நலாந்தா மாவட்ட இயற்கை முறை காய்கறிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

Comments