இரு வயது பாலகனின் உடலில் 40 தையல் ஊசிகள் கண்டுபிடிப்பு!!!


உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தையொன்றின் உடலில் 40க்கு மேற்பட்ட தையல் ஊசிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரேசிலின் வடகிழக்கு பஹியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் மாற்றாந் தந்தையான ரொபேர்டோ கார்லொஸ் மகால்ஹேயஸ், (Roberto Carlos Magalhaes, 30,) மந்திர சக்தி பிரயோக நோக்கத்திற்காக மேற்படி குழந்தையின் உடலில் தையல் ஊசிகளை உட்செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


6
மாத காலத்திற்கு முன் தன்னுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ள தனது மனைவியை பழிவாங்கும் நோக்கத்திலேயே தனது காதலியின் ஆலோசனையின் பிரகாரம் மனைவிக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தையை கொல்ல தீர்மானித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ரொபேர்டோ கார்லொஸ் மகால்ஹேயஸ் கூறினார்.


தனது புதிய கணவனின் கொடூர செயல் குறித்து அறியாத குழந்தையின் தாய், தனது குழந்தை வயிற்று வலியாலும் வாந்தியாலும் அவதிப்படுவதைக் கண்டு அக்குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி வந்தார்.


குழந்தைக்கு உடனடியாக "எக்ஸ்ரே' படம் எடுக்கப்பட்டது. இதன்போது கழுத்து, உடல் பகுதி, கால்கள் என்பவற்றில் ஒரு தொகை தையல் ஊசிகளும் நுரையீரலில் ஒரு தையல் ஊசியும் ஏறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதில் ஒரு சில ஊசிகள் 2 அங்குல நீளமானவையாகும்.


தொடர்ந்து மகால்ஹேயஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சத்திரசிகிச்சை மூலம் குழந்தையின் உடலிலிருந்து ஊசிகளை அகற்றும் நடவடிக்கை புதன்கிழமை ஆரம்பமானது.


உடலின் சில பகுதிகளிலிருந்து ஊசிகளை அகற்றுவது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் அவற்றை உடனடியாக அகற்ற முடியாதுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.


நன்றி:  தகவல் வலைதளம்

Comments