Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆயக்கலைகள் 64

நம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைகள் 64
என்று சொல்கிறார்கள் அது என்ன வென்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது . அப்படியே யாரிடமாவது கேட்டால் அதற்க்கு சிலர் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவார்கள் . கீழே குறிப்பிட்டு உள்ளது தான் இந்த ஆயக்கலைகள் 64

1.
எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2.
எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
3.
கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4.
மறைநூல் (வேதம்);
5.
தொன்மம் (புராணம்);
6.
இலக்கணம் (வியாகரணம்);
7.
நயனூல் (நீதி சாஸ்திரம்);
8.
கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9.
அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10.
யோக நூல் (யோக சாஸ்திரம்);
11.
மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12.
நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13.
கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14.
மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15.
உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
16.
மறவனப்பு (இதிகாசம்);
17.
வனப்பு (காவியம்);
18.
அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19.
மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20.
நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21. பாட்டு (கீதம்);
22.
ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23.
மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24.
யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
25.
நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26.
மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27.
விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28.
பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29.
தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30.
யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31.
குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32.
மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33.
நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
34.
போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35.
மல்லம் (மல்யுத்தம்);
36.
கவர்ச்சி (ஆகருடணம்);
37.
ஓட்டுகை (உச்சாடணம்);
38.
நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39.
காமம் (காம சாஸ்திரம்);
40.
மயக்குநூல் (மோகனம்);
41.
வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
42.
இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43.
கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44.
பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45.
மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46.
நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47.
கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48.
இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
49.
மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
50.
வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51.
உடற் (தேகப்) பயிற்சி;
52.
கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53.
தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
54.
மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55.
பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56.
அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57.
நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58.
வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59.
கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60.
நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61.
விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62.
புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63.
வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64.
சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலு


நன்றி : இன்று ஒரு தகவல்
படங்கள் : கூகுள் 

Post a Comment

0 Comments