90 நாட்களில் 450 மாடி கட்டிடம்

           
             தாம் செய்த சாதனையை தாமே முறியடிப்பதில் சீனா பெயர்பெற்றது. இப்பொழுதும் சீனா தம் சாதனையை தாமே முறியடிக்க திட்டமிட்டுள்ளது.        

' ஸ்கை சிட்டி' 90 நாட்களில் 450 மாடி கட்டிடம்

        சீனாவில், ஏற்கனவே 15 நாட்களில் 30 மாடி கட்டிடத்தை கட்டி முடித்து, 
சாதனை நிகழ்த்தினர்.இப்போது, அந்த சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர்.90 நாட்களில், 450 மாடிகளை உடைய,பெரும் கோபுரத்தை கட்ட முடிவு செய்துள்ளனர்.

       இந்த கட்டிடம், சியாங்ஜாங் ஆற்றங்கரையில் உள்ள, சாங்ஷா நகரில், அமைந்துள்ளது.ஒரு நாளைக்கு 5 மாடி என்ற மதிப்பீட்டில், 90 நாட்களுக்குள், முழு கட்டிடத்தையும், கட்டி முடிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. துபாயின், புர்ஜ் கலிபாவில் உள்ள , உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டிய நிறுவனம் தான், இந்த கட்டிடத்தையும் கட்டுவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ளது.

        இதில் 83 சதவீத இடங்கள், குடியிருப்புக்கும், மீதமுள்ளவை, வர்த்தக நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்திற்கு ' ஸ்கை சிட்டி' என பெயரிட்டுள்ளனர். எவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அதை தாங்கும் வகையில், அதி நவீன தொழில் நுட்பத்தில், இந்த கட்டிடம் கட்டப்படவுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments