உலகின் முதல் கணனி நூலகம்இ- நூலகம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள சான் அண்ட்டோனியோ நகரில் நூல்களே இல்லாத நூலகம் ஒன்றை நெல்சல் உல்ஃப் என்பவர் திறக்கத் திட்டமிட்டுள்ளார்.


இந்த நூலகத்தில் புத்தகங்கள் மின் வடிவில் கிடைக்கும். நூறு மின்– புத்தகங்கள்(E-Reader) வாசகர் மத்தியில் சுற்றுக்கு விடப்படும்.

சிறுவர்களுக்கு மட்டும் என்று ஐம்பது மின்– புத்தகங்கள் இருக்கும். ஐம்பது கணனி நிலையமும், 25 மடிக் கணனியும்(Laptops), 25 கைக்கணனியும்(Tablets) இருக்கும்.

இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் தங்களின் மின் புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்கலாம். இங்குள்ள புத்தகங்களை மின்னணுப்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நூலகக் கட்டிடம் 4,989 சதுர அடிப்பரப்பளவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படும்.

அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டு மின்னணு நூலகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நெல்சன் உல்ஃப், .

இவர், பத்தாயிரம் நூல்களை இந்தப் புதிய மின்னணு நூலகத்திற்குக் கொண்டுவருவதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளார். இதற்கு 2.5 லட்சம் டாலர் தேவைப்படும்.

தற்போது அமேஸான் மற்றும் பார்னஸ் & நோபிள் நிறுவனத்தார் தங்களின் மின் புத்தகச் சேவையை வழங்க முன்வந்துள்ளனர்.

நூல்கள் தவிர இசை, திரைப்படம் போன்றவற்றை மின்னணு உதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கும் திட்டமும் உல்ஃபிடம் உண்டு.

இது குறித்து உல்ஃப் கூறுகையில், இந்த மின்னணு நூலகம் வழக்கமான புத்தக நூலகத்துக்கு மாற்று கிடையாது. அதனினும் மேம்பட்ட வளர்ச்சி நிலையாகும் என்றார்.

இது உலகின் முதல் கணனி நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments