நம் தேசிய விலங்காம் புலியைக் காப்போம்!          புலிகளின் தோல், எலும்பு, பற்கள், நகம் என ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு மருத்துவ குணம் இருப்பதாக சீன மருத்துவம் கூறுகிறது. சீனா, தைவான், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சீன மருத்துவம் மீது நம்பிக்கை நிலவுகிறது இக்காரணத்தால் தான் இந்தியாவில் திருட்டுத்தனமாக புலி வேட்டை நடக்கிறது என்கிறார்கள், புலியின் உறுப்புகள் இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்தப்படுகின்றன.இதில் பெரும் பகுதி சீனாவுக்குப் போய்ச் சேருகிறது.

        . உலகில் ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக புலிப் பொருள் கடத்தல் மூன்றாவது இடம் வகிக்கிறது. ஆகவே தான் புலிப் பொருள் கடத்தலை அனுமதிக்கலாகாது என்று 1987 ஆம் ஆண்டில் சர்வதேச மாநாடு ஒன்றில் உடன்பாடாகியது. புலிப் பொருள் விற்பதை அந்தந்த நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் சீனா புலிப் பொருள் வர்த்தகம் மீது தடை விதித்தது.

                  ஒரு காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்குக் கரை வரை பல நாடுகளிலும் புலிகள் இருந்தன. இவற்றில் பல இனங்கள் அழிந்து விட்ட்ன. இப்போது ஆசியாவில் ஒரு சில நாடுகளில் மட்டுமே புலிகள் உள்ளன. இந்தியப் புலி இனம் பெங்கால் டைகர் என அழைக்கப்படுகிறது. இது வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் உள்ளது. தவிர, மலேயப் புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியப் புலி, தென் சீனப் புலி, இந்தோசீனா புலி என பிற புலி வகைகளும் உள்ளன.

            1900 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் ஒரு லட்சம் புலிகள் இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. உலக வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பின்படி இப்போது உலகில் சுமார் 3000 முதல 5000 புலிகளே உள்ளன.

         ஆகையால் நம் அரசு, நம் நாட்டின் தேசிய விலங்காம் புலி இனத்தை,அதன் அழிவில் இருந்து காக்க தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் சில வருடங்களில் புலி இனமே அழிந்துவிடுவதுடன், நம் வருங்கால சன்னதிகள் புலியை படங்களிலும்,அருங்காட்சியிலும் மட்டுமே காணும் நிலை உருவாகிவிடும்.

Comments

  1. அது மட்டுமல்ல சகோதரி, நமது நாட்டின் நிலத்தடி நீர் குறைந்து போனதற்கும் புலிகளை அழித்ததே காரணம்! மரங்கள் நிலத்தடி நீரை சேமிக்க வல்லவை, புலிகளுக்கு பயந்து காடுகளை அழிக்காமல் இருந்த மனிதன், புலிகளை அழிப்பதன் மூலம் காடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி, காடுகளை அழித்து பிளாட் போடுவதும் , மரங்களை வெட்டி அவற்றை உபயோகப்படுத்தினான். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து போனது, 3 வது உலக யுத்தம் வருமாயின் அது தண்ணீருக்காக மட்டுமே வரும் என்று உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.... வரும் சந்ததியினருக்கு இதை தெளிவு படுத்த வேண்டியது நமது தலைமுறையினரின் தலையாய கடமை....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்