குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும்

குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்

* ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
* அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.
* அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.
* அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
* ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
* ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.

* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்