நீங்கள் ஒரு நல்ல வலைப்பதிவரா?


நீங்க நல்லவரா? கெட்டவரா? இப்படி கேட்டாலே எல்லோருக்கும் பின்னால் ஒரு இசை கேட்கும்? சரி தானே?

இங்கு உங்களை நல்ல பதிவரா என்று கேட்கிறேன். நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

தெரியலையேமா தெரியலையே? அப்படியா?

ஒரு வலைப்பதிவர் நல்லவரா கெட்டவரா என்று எதை வைத்துச் சொல்வது
அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் பொருத்தா

எல்லோருமே அவர் அவரது கருத்துக்களைத் தான் எழுதுகிறார்கள், அவரவருக்குத் தோன்றுவதை, அவரவரது கற்பனைகளை தான் எழுதுகிறார்கள்.

சொல்ல வருவது என்ன கருத்தாக இருந்தாலும் அதை ஒரு விதமாக சீனியில் நனைத்துக் கொடுப்பது போல கொடுப்பவர் தான் நல்ல பதிவரா?

இங்கு நான் பதிவரை நல்லவர் கேட்டவர் என்று அவர் எழுதும் கருத்துக்களை வைத்தோ அல்லது அவரது வார்த்தை உபயோகத்தை வைத்தோ சொல்ல வரவில்லை.

பிறகு? ஒருவர் எழுதும் கருத்தை வைத்துச் சொல்லப் போவதில்லை என்றால்? பிறகு எதை வைத்து?

பெரும்பாலும் வலைப்பதிவு எழுதுபவர்கள் எல்லோருமே அந்தப் பதிவிற்கு ஏற்றார் போல புகைப்படங்களையும் சேர்த்துப் பதிவது வழக்கம். 

இப்போது நான் சொல்லப் போகிறேன், நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று, இந்தப் புகைப்படத்தை வைத்து!

உடனே, அப்பாடா, நான் நல்ல புகைப்படங்களை தான் பதிகிறேன், நான் நல்ல பதிவன் என்று நிம்மதி அடைந்துவிடாதீர்கள்!

நீங்கள் பதியும் புகைப்படம் நல்ல புகைப்படமா என்பது பொருத்தது அல்ல, நீங்கள் எப்படிப்பட்ட பதிவர் என்பது. அது நீங்கள் யாருடைய புகைப்படங்களை   
பதிவு செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சரி, நீங்கள் நல்ல பதிவரா என்று சொல்வதற்கு முன்பாக, நான் நல்ல பதிவரா என்று சொல்ல வேண்டும் தானே? பிறகு நீங்கள் கேட்பீர்கள், நீ மட்டும் என்ன யோக்கியமா என்று? அதனால் முதலில் நான் நல்லவளா கெட்டவளா என்று சொல்லிவிடுகிறேன்.

நான் நல்லவள் இல்லை! அதற்காக கெட்டவள் என்றும் இல்லை. என்ன? கொஞ்சம் குழப்பத் தான் செய்வேன் நான், பொறுத்துக் கொள்ளுங்கள்?

புகைப்படம் என்று சொன்னேனே? ஆம், நான் என் வலைப்பூவிலோ அல்லது இங்கோ என் பதிவுகளோடு இணைக்கும் புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டவை அல்ல! அவற்றை நான் எங்கிருந்து பெறுகிறேன்? இருக்கவே இருக்கிறது கூகுள்! அதில் தான் தேடி, எனக்குப் பிடித்த படத்தை, நான் பிடிக்கவில்லை என்றாலும் என் வலைப்பூவில் போட்டுக் கொள்கிறேன்.

இப்படி நான் செய்வதால், நான் நல்ல பதிவர் இல்லை!

ஏனெனில் என்னுடைய வலைப்பூவில் நான் பதியும் புகைப்படங்கள் யாரால் எடுக்கப்பட்டது என்று இதுவரை குறிப்பிட்டதே இல்லை!

இன்று தான் ஒரு பதிவைப் படித்தேன். அந்தப் பதிவை எழுதியவர் ஒரு புகைப்படக் கலைஞர், ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்.

தங்களது புகைப்படங்களை, பெயர் குறிப்பிடாமலோ, இணைப்பைக் குறிப்பிடாமலோ நிறைய பதிவர்கள் பயன்படுத்துவதாகவும், அது வேதனை தரும் ஒன்றாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் எப்படி அவர்களது புகைப்படங்களுக்கு கிரெடிட் வழங்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுவரை எனக்கு இது பற்றி இவ்வளவு விபரமாகத் தெரியாது! இப்போது தான் தெரிந்து கொண்டேன். இன்றிலிருந்து முடிந்த அளவு யாருடைய புகைப்படம் என்று குறிப்பிட்டு பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

கிரெடிட் எப்படி வழங்குவது? உதாரணமாக இங்கு நான் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி அதற்கு கிரெடிட் வழங்கி இருக்கிறேன்.

கிரெடிட் என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. யார் அந்தப் புகைப்படத்தை எடுத்தது, மேலும் அந்த புகைப்படத்தை அவர்கள் பதிவிட்டிருக்கும் தளத்தின் இணைப்பு, இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

Elecrocuted flowers by Robert buelteman
அவ்வளவே தான். இதை சரியாக நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்து விட்டீர்கள் என்றால், நீங்க மிகவும் நல்ல பதிவர்!

அதற்காக “image courtesy: Google” என்று குறிப்பிடாதீர்கள். கூகுள் வெறும் தேடுபொறி தான். நீங்கள் முடிந்த அளவு அந்தப் புகைப்படம் எந்த தளத்தில் இருந்து எடுத்தீர்கள் குறிப்பிட்ட பதிவு இவற்றை குறிப்பிடுங்கள்.

இவ்வாறு செய்யாமால் கண்ணா பின்னா என்று நீங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்தினீர்கள் என்றால், பின்னால் காப்பி ரைட்ஸ் பிரச்சனைகள் வரலாம்.

இதைத் தவிர்க்க நீங்கள் உங்கள் தளத்தில் உரிமை மறுப்பு என்று ஒரு இணைப்பை பொதுவாகப் போடலாம். அதாவது, பின்வருமாறு நீங்கள் போடலாம்,

இங்கு, இந்த வலைப்பூவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டவை இல்லை.

அது உங்களது புகைப்படமாக இருந்தால், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், உங்கள் புகைப்படம் பயன்படுத்தப்படிருக்கும் பதிவின் இணைப்போடு, கீழே குறிப்பிட்டிருக்கும்  மின்னஞ்சல் முகவரிக்கு. உங்களது புகைப்படம் என்பதை அதில் குறிப்பிட்டு உங்களது தளத்திற்கு இணைப்பு வழங்கி, மீண்டும் அந்தப் புகைப்படம் மறு பதிவு செய்யப்படும். இல்லை, உங்களுக்கு அந்தப் புகைப்படம் இங்கு பதியப்படுவதில் விருப்பம் இல்லை என்றால், கூடிய விரைவில் நீங்கள் குறிப்பிடும் படம் நீக்கப்படும்.

இப்படிக் குறிப்பிட்டு, உங்களது மின்னஞ்சல் முகவரியை கீழே குறிப்பிடலாம். இதை ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் குறிப்பிட்டால் சிறப்பு, ஏனெனில் நாம் தமிழர்களின் புகைப்படங்களை மட்டும் தான் பயன்படுத்துவோம் என்றில்லை. தமிழ் தெரியாத வேற்று மொழிக்காரர்களுக்காக நீங்கள் ஆங்கிலத்திலும் போடலாம்.

சொல்லுங்க இப்போ, நீங்க நல்ல பதிவரா? கெட்ட பதிவரா?

நான் நல்லவலாகிட்டேன் பா!

சரி, இவை எல்லாம் செய்துவிடுங்கள், நீங்களும் நல்ல பதிவராகிவிடுங்கள்.!

------------

Comments

 1. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலே...! இருந்தாலும் நன்றி...

  கவனிக்க : முடிவில் கேள்விக்குறி இல்லாமல் ஆச்சரியக்குறி...

  1. ?

  2. !

  ReplyDelete
  Replies
  1. :) நன்றி ஐயா! உண்மையில் நிறைய புகைப்படக்கலைஞர்கள் வருந்துகிறார்கள் அதனால் தான் இந்தப் பதிவு.

   Delete
 2. ஹா ஹா.. நல்ல கருத்து தானே? நானும் இனி முயன்று பார்க்கிறேன்.. :-)

  ReplyDelete
  Replies
  1. :) ம்ம் கொஞ்சம் கடினம் தான் செய்வது, ஆனாலும் இப்படிச் செய்வதால் புகைப்படங்களை எடுத்தவருக்கு ஒரு மேன்மை கிடைக்கும்.

   Delete
 3. நிச்சயமாக இது நல்ல கருத்து...
  பல கலைஞர்களை ஊக்கப்படுத்தும்..
  நான் கண்டிப்பாய் செய்கிறேன்..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்