பாம்பும்,சிறுவனும்! நண்பேன்டா!


பாம்பும்,சிறுவனும்!  நண்பேன்டா!

              "பாம்பு என்றால், படையும் நடுங்கும்' என்ற பழமொழியை, பொய்யாக்கி இருக் கிறான், சீனாவைச் சேர்ந்த இந்த சிறுவன். சீனாவின், டொங்கூன் என்ற பகுதியைச் சேர்ந்த, அஜெ லியு என்ற, 13 வயதுச் சிறுவன், 15 அடி நீளமுள்ள, மலைப் பாம்புடன், கொஞ்சி விளையாடியும், படுத்து உறங்கியும், மலைக்க வைக்கிறான்.
இவன் பிறப்பதற்கு முன், இவனது தந்தை, வனப் பகுதிக்கு சென்றபோது, மலைப் பாம்பு முட்டை ஒன்றை எடுத்து வந்துள்ளார். அந்த முட்டையிலிருந்து பிறந்தது தான், இந்த மலைப் பாம்பு. சிறுவன் பிறந்ததும், பாம்பும் அவனும், நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
சின்ன வயதிலிருந்தே, பாம்புடன் விளையாடி வருவதால், இப்போது, அந்த பாம்பு, பல அடி நீளத்துக்கு வளர்ந்தாலும், அதை பார்த்து, அவன் பயப்படுவது இல்லை. பாம்பும், அவனை ஒன்றும் செய்வது இல்லை.
       சிறுவனின் பெற்றோர், அவனை தனியாக, வீட்டில் விட்டுச் சென்றாலும், பாம்பு தான், அவனுக்கு காவல் இருக்கிறது. இந்த அதிசய சிறுவனின், துணிச்சலைப் பார்த்து, ஆச்சரியப்படுகின்றனர், சீன மக்கள்.


நன்றி
தினமலர்

Comments