இரு சக்கர வாகனத்தில் செல்பவரா நீங்கள்?


                                                          ‘தலை’யாய கடமை
              இரு சக்கர வாகனத்தில் செல்பவரா நீங்கள்?இதை படிங்க முதலில்.
      நேற்று என் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, சாலையில் ஒரு விபத்தைக் காண நேரிட்டது. விபத்தில் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவருடைய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம், அவர் வண்டியில் வரும் போது ‘ஹெல்மெட்’ அணிய தவறியது தான். ஏனென்றால் அவர் உடலில் தலையை தவிர்த்து வேறு எங்கும் அடிபடவில்லை.’கரணம் தப்பினால் மரணம்’ என்பதை, நாம் ஒவ்வொரு பயணத்தின் போதும் நினைவில் வைத்து பயணிக்க வேண்டும்.

தலை கவசம்

                     இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை,இன்று அபரிகரமாக பெருகி விட்டது.இதற்கு தகுந்தாற் போல்,இதில் பயணிக்கும் பலரின் வேகம் அதிகரித்து விட்டது; போட்டி போட்டு போவதில்,யுவன்கள் சிலரின் பங்கு இருப்பது,சாலைப் பயணங்களின் போது கண்கூடாக காண முடிகிறது. மிதமான வேகத்தில் செல்லாமல், தங்கள் திறமையை இதில் காண்பித்து,விபத்துகளில் சிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது இவர்களின் தலை தான்.
         இதை கருத்தில் கொண்டு தான், இரு சக்கர வாகனங்களை இயக்குவோர் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் அவ்வப்போது கண்காணித்து, ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால்,இதை காதில் வாங்கிக் கொள்ளாத சிலர்,விபத்தில் சிக்கி,வாழ்க்கையையே இழக்கும் வேதனை, தினம்,தினம் நாளிதழ்களில் செய்தியாக வெளிவருகின்றன. ஹெல்மெட் அணிய வேண்டும் சரி..தரமான ஹெல்மெட்டை எப்படி கண்டறிந்து  வாங்குவது என்ற கேள்வி, பலரது பலரது மனதில் இருக்கும். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ..!
        நீங்கள் வாங்கும் ஹெல்மெட்டின் மேல் பகுதி, பாலிகார்பனேட்,பைபர் கண்ணாடியிலான கலவையால் தயாரிக்கபட்டிருக்க வேண்டும். கடினப் பகுதியை அடுத்து, பாலியஸ்டரினால் அமைக்கப்பட்ட அடுக்கும் இருந்தால் தான், விபத்து நேரிடும் போது, கடினமான பொருட்கள் மீது மோத நேரிட்டால், உங்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். ஹெல்மெட் முன்புறம் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.இல்லையென்றால் பயனளிக்காது.
        தரமற்ற ஹெல்மெட்டுக்களை வாங்குவதை விட,குறிப்பிட்ட கடைகளில் விற்கப்படும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட ஹெல்மெட்டுக்களை,பணம் செலவானாலும் பரவாயில்லை என்று நினைத்து வாங்க வேண்டும். தலையோடு சரியாக பொருந்தும் படி வாங்கினால்,வீண் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.
        ஹெல்மெட்டை அணியும் போது, அதோடு இணைக்கபட்டிருக்கும் ஸ்ட்ராப்பையும் தாடையோடு பொருத்திக்கொள்ள வேண்டும்.அப்போது தான் விபத்து நேரிடும் போது, ஹெல்மெட் அவிழ்ந்து விடாமல் இருக்கும்.ஆனால், ஹெல்மெட் அணிந்து கொண்டால் ,முடி கொட்டுகிறது,நீர் கோர்த்துக் கொள்கிறது என்பது பலரும் முன் கைக்கும் கருத்து.இதை தடுக்க பருத்தியினாலான துணியை தலையில் கட்டிக் கொண்டு அதன் மீது அணிந்தால் எவ்வித பாதிப்பும் இருக்காது.
        வாகனம் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். காரணம், பின் பக்கம் அமர்ந்திருப்பவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கட்டாயத்துக்காக, சாலையோரங்களில் விற்கும் ஹெல்மெட்களை வாங்கி அணிந்து கொண்டால், கழுத்து வலி,தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தரமானதை வாங்கி அணிய மறக்காதிர்.

                     ‘தலை கவசம்! உயிர் கவசம்!’


        என்பதை மறந்தும் மறக்காதிர். 

Comments

  1. அவசியமான தகவல்கள்.

    ReplyDelete
  2. எல்லோரையும் வர்புறுத்துமுன் உங்களின் சுற்றத்தையும் ஹெல்மெட் போடா சொல்லுங்களேன்//
    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்