வந்தாச்சு புதிய சிமென்ட்…!வந்தாச்சு புதிய சிமென்ட்…!

          சிமென்டிலும், காங்கிரீட்டிலும் புதிய வலிமையைக் கூட்டுவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, செலவைக் குறைப்பது என பல ஆராய்ச்சிகள் செய்கின்றனர். விலை குறையாவிட்டாலும், புதிய மாற்றங் களுக்கு குறைவில்லை. தற்போது "பாலிமர் சிமென்ட்' என புதிய சிமென்ட் கண்டறியப்பட்டு உள்ளது. உடையாத தன்மை, அதிக உறுதி, குறைவான எடை, தீப்பிடிக்காத தன்மை இவை தான் பாலிமர் சிமென்டின் சிறப்பு அம்சங்கள்.

           இதில் உள்ள பாலிமர் இழைகள் தண்ணீருடன் சேரும் போது, நீரை வெளியேற்றம் செய்து கலவையை இறுகச் செய்கின்றன. இதனால் இதன் உறுதி பல மடங்கு அதிகரிக்கிறது. இந்த பாலிமர் இழைகள், கால்சியம் சிலிகேட்டால் ஆனவை. அழுத்தினாலும் வளையும். ஆனால் உடையாது.

            இந்த புதிய சிமென்ட் சந்தைக்கு வரும் பட்சத்தில் நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் பல விபத்துக்களும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி
தினமலர்

Comments