உலகிலேயே உள்ள மிக....

உலகிலேயே உள்ள மிகப் பெரிய உயிர்த் தாவரம் 


           உலகிலேயே உள்ள மிகப் பெரிய உயிர்த் தாவரம் காளான்தான்.

        ஒரிகான் மாநிலத்தில் உள்ள மல்ஹேர் தேசிய பூங்காவில் உள்ள காளான்தான் மிகப் பெரியதாகும். இது 890 ஹெக்டேர் (1,200 ஏக்கர்) பரப்பில் படர்ந்துள்ளது. அதன் வயது 2,000 லிருந்து 8000 ஆண்டு வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. காடு முழுவதிலும் தனித் தனி அடுக்குகளாக இந்த ஒரிகான் காளான் வளர்வதாகத்தான் முதலில் ஆய்வாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால், உலகிலேயே மிகப் பெரிய ஒரே உயிர்த் தாவரமான இது மண்ணுக்கு அடியில் ஒட்டியுள்ள ஒரே காளான் என்பதை ஆய்வாளர்கள் இப்போது உறுதிப்படுத்தி உள்ளனர்

உலகிலேயே உள்ள மிகப் பெரிய நீர்வீழ்ச்சி 

          உலகிலேயே உள்ள மிகப் பெரிய நீர்வீழ்ச்சி விக்டோரியா நீர்வீழ்ச்சி

விக்டோரியா (Victoria) நீர்வீழ்ச்சி ஜாம்பிசி (Zambezi) ஆற்றில்அமைந்துள்ள அழகான மற்றும் அதிசயமும் ஆகும். இது ஜாம்பியா, ஜிம்பாப்வேநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக அகலமானநீர்வீழ்ச்சி ஆகும். கிட்டத்தட்ட இரண்டு கி.மீ. அகலம் உடையது. அருவி விழும் இடத்திலிருந்து எழும் புகை போன்ற நீர் துகள்களை பல கி.மீ. தூரத்திலிருந்தே காண இயலும். இதில் ஒரு நிமிடத்திற்கு 546 மில்லியன் கன மீட்டர் நீர்விழுகிறது. நூறு மீட்டர் ஆழமான இடைவெளி ஒன்றில் இது விழுகிறது. மிக அமைதியான, அகலமான ஆறான ஜாம்பிசி ஆற்றில் திடீர் திருப்பமாகஆர்ப்பரித்து விழுகிறது விக்டோரியா நீர்வீழ்ச்சி.

உலகில் மிக உயரமான பூ

      உலகில் மிக உயரமான பூ “ரைரன் அரம்”

        உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. இதன் இரசாயனப் பெயர் Amorphophallus Titanum ஆகும். ரைரன் அரம் பூ இந்தோனேசியாவின் சுமாத்திரா மழைக்காடுகளில் பூத்துக் காணப்படும் ஒரு அரிய வகைப் பூ ஆகும்.

           ரைரன் மலரானது பூக்கத் தொடங்கி முதல் 10 நாட்களும் 77 சென்ரி மீற்றர் உயரமாகவும் பின்னர் 45 சென்ரி மீற்றரிலிருந்து 122 சென்ரி மீற்றர் வரை உயர்ந்து வளர்ந்து வருமாம். ரைரன் அரம் மலரானது முழுமையாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வரை காணப்படுமாம்.

உலகிலேயே மிக நீளமான பேருந்து


     ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய பேருந்தானது 101 அடி நீளத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 256 பயணிகளுக்கான இருக்கை வசதி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக பிரமாண்ட கலர் டிவி


                ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பந்தைய கார் தயாரிக்கும் பிரபல நிறுவனம் பிரமாண்ட கலர் டி.வி. பெட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் விலை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 கோடியே 35 லட்சம்(4,14,000 பவுண்ட்) ஆகும். ‘சி.எஸ்.இ.இ.டி. 201’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டி.வி.யின் திரை 16 அடி அகலம் இருக்கும். ஆண்டுக்கு 25 டி.வி.களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறார்கள்.இங்கிலாந்து நாட்டில் தற்போது ரூ.18 லட்சம் மதிப்பில் 84 அங்குலம்( 7 அடி அகலம் திரை) கொண்ட டி.வி.க்கள் விற்பனையில் இருக்கின்றன. இப்போது ஆஸ்திரியா நிறுவனம் வெளியிட்டுள்ள 16 அடி அகன்ற திரை டி.வி.யே உலகிலேயே மிக பிரமாண்ட டி.வி. என கருதப்படுகிறது.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்