நெஞ்சை தொட்ட கதைகள்


ஒரு மூதாட்டி காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியை ஒரு சிறுவன் உற்று பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவர் அருகில் சென்ற சிறுவன் பாட்டி இந்தாங்க இந்த காச வச்சுக்கோங்க என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினான்.

அதற்க்கு அந்த பாட்டி காசெல்லாம் வேனா ராசா ஏதாது வாங்கிக்கோனு என்று பதில் சொல்ல அந்த சிறுவன் ஏதோ யோசித்துக் கொண்டே இருந்தான்.

சற்று நேரம் கழிந்த பின் பாடி எனக்கு ஒரு முத்தம் தா என்று கேட்க்க சற்றும் யோசிக்காமல் அந்த பாட்டி அந்த மழலையின் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டார். அந்த சிறுவன் மறுபடியும் அவரிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். வேணாம் ராசா ஏதாது வங்கிக்கோனு சொல்ல அந்த சிறுவன் அதான் உனிடம் இருந்து முத்தத்தை வாங்கிவிட்டேனே என்றான்.

இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாட்டி அந்த சிறுவனை கட்டி அனைத்து சிறு துளி கண்ணீர் சிந்தினார்.

அந்த சிறுவன் தந்தது முத்தத்திற்கு தந்தபரிசு அல்ல அது அந்த பாட்டி தந்த பாசத்திர்க்கான பரிசு.
==================================================================
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை.

அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள்.

புத்தர் சிரித்தார். “இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்...!

Comments

  1. சிறப்பான கதைகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்