திட்டமிட்ட தீட்டுகளா...?


தீட்டு...?

ஆமாம் தீட்டுதான்...?

நிச்சயமாக எனக்கு தெரியும் இது தீட்டு...?


இது தீட்டா ? இல்லையா ? இதை பற்றி நீங்க என்ன நினைகின்றீர்கள்.... 

நாட்டில் விபச்சாரம் நடக்கவில்லை என்று உங்களால் உறுதி அளிக்கமுடியுமா...?

பாரததேசத்தில் தாசிமுறைதான் ஒழிக்கபட்டுள்ளது விபசாரம் இல்லை.
விபச்சாரம்...விபச்சாரம்...விபச்சாரம் என்று அபச்சாரம் பேசும் மக்களின் ஆதரவு விலைமாதற்க்கும் கூட உண்டு ஆனால் எங்களுக்கு இல்லை...? 

ஆம் தரகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம்,வேலைவாய்ப்புகள் கூட கிடைக்காதது ஏன்...? 

இவர்களுக்கு, இருக்கும் தொழிலுக்கு காரணம் உண்டு எனில் எங்கள் தொழிலுக்கும் காரணங்கள் பல உண்டு அதைபற்றி அறிந்தவர்கள் உண்டா...? 

எங்களின் வாழ்வாதாரதிற்க்கு என்றாவது எவராவது சிந்தித்தது உண்டா...

நாங்கள் தீண்டதாகதவர்கள்தான்... இந்தவாசகத்திற்குகூட கொடிபிடிக்க கோஷ்டிகள் இங்கு உண்டு ஆனால் எங்களுக்கு....

நண்பர்களே...

கடந்த வாரம் விஜய் டிவி நீயா நானா ? பார்த்தீர்களா ? 

எம்.எல்.எம் வணிக நிறுவனங்களை பற்றிதான் ஆராய்ச்சிகள்...
சரி முடிவு என்ன...?

நாட்டில் சரியான சட்டங்கள் இதற்கு இல்லை அதற்கு  மத்திய,மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் எனக்கூறிய தோழருக்கும், ஆசைகளே இவைகளுக்கு காரணம் என போதித்த நண்பருக்கும் பரிசுகள் கைதட்டல்கள் கிடைத்தன ஆனால் தீர்வு...?

நிகழ்ச்சி முடிந்தது நாம் தூங்கிவிட்டோம்........ 

இன்றைக்கும் பல எம்.எல்.எம் நிறுவனங்களில் விநியோகஸ்தர்களுக்கு வழிகாட்டியாக கொடுக்கபட்டு வரும் புத்தகமே நண்பர் கோபிநாத் அவர்களுடையதுதான்...? 

நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தது எல்லாம் எம்.எல்.எம்.மா...?

ஆடு வளர்ப்பும், கோழி வளர்ப்பும், பன்றிவளர்ப்பும் எம்.எல்.எம். வேலையா...?

1 லட்சம் கொடுத்து 1 கோடிக்கு ஆசைபட்டு ஏமாந்தால் அதற்கெல்லாம் காரணம் எம்.எல்.எம் காரணமா...?

ஆளையே விழுங்கி ஏப்பம் விடும் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய தூண்டும் நிறுவனங்கள் அனைத்தும் எம்.எல்.எம்.நிறுவனங்களா...?

உறவுகளே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்...
எம்.எல்.எம் என்பது ஒரு வணிக முறை மட்டுமே.

அன்றைய நிகழ்வில் ஒரு தோழி சொன்னதுபோல் ஆஆஆவென்று வாய்பிளந்து பார்த்தது மட்டுமன்றி அமெரிக்கவழி வணிக திட்டம் மட்டும் அல்ல எந்த வணிக திட்டத்தையும் அப்படி பார்த்தால் இப்படிதான் நடக்கும் என்பதற்கு இவரே சாட்சி...?

வளமோடு வாழுங்கள் என்ற தலைப்பில் மதுரகவி என்ற பெயரில் பதிவிட்ட பதிவுகளை மீண்டும் ஒரு முறை அனைத்தையும் வாசியுங்கள் இந்த நிகழ்ச்சியில் தோழரும்,நண்பரும் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அதில் இருக்கும்....?

நேரடிவணிக திட்டங்களை பற்றி வக்கீல்களிடம் கேட்பதற்கு வாய்ப்பு கொடுத்த விஜய் தொலைகாட்சி முகவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டாமா...? 

வணிக முகவர்களின் வாழ்க்கை அவலங்கள் தெரியுமா உங்களுக்கு...?

வாருங்கள் இந்த ''தீண்டதகாதவர்களின் வாழ்க்கை நிலைகள்'' பற்றி வரும் நாட்களில்...

என் எழுத்துகளில் பிழைகள் உண்டு ஆனால் வணிக முகவர்களின் வாழ்க்கையில் பிழைகளை உண்டாக்கலாமா... சகபயணிகளே...?

அவர்களில் ஒருவன் மதுரகவி.

Comments

 1. Nalla visayam pesa vaai illai inge velai vaaypai uruvakkum yogithai arasankathitam illai
  yemanthathai pesum vijay t.v yen vaazhvathai kaatta marukkinrathu

  ReplyDelete
  Replies
  1. தொலைக்காட்சி நிகழ்வால் என்னை தொடர்புகொண்டவர்கள் எண்ணிக்கையும் கூடியது என்பதை மறுக்கமுடியாது தோழரே...? நடுநிலையாக தகவல்களை வெளியிடுவதும் அவர்கள் கடமை அல்லவா? இனியும் அரசாங்கமே வேலைதரும் என்பதைவிட வேலை இல்லாதவர்களுக்கு மாதம் தோறும் வருமானம் தரும் வழிகளே அதிகம்..?
   நன்மை தீமை அனைத்திலும் உண்டு அது இதிலும் ஆனால் தீமைமட்டுமே உள்ளதாக சித்தரிப்பதும்,நடத்துவதும் மட்டும்தான் இன்றையநிலை. நான் யாருடைய மனதையும் வலிக்கும் வகையில் பதியவில்லை. நீங்களே பாருங்களேன் இதுபோன்ற வணிக தகவல்களுக்கு கிடைக்கும் மரியாதையின் லட்சணத்தை...

   Delete
 2. aemarupavargal erukkum varai,aematrupavargal erukkathan seivaargal.makkal sinthipaargala

  ReplyDelete
  Replies
  1. அதுமட்டுமல்ல தோழி... நீங்கள் எழுதும் தகவல்களைதான் நாங்கள் வியாபாரம் செய்கின்றோம்...? புரியவில்லையா..? இருதினங்கள் முன் நீங்கள் மாதுளை பழத்தின் தன்மைகள் பற்றி பதிவிட்டீர்கள் அதே மாதுளை உடன் திரிபலா சேர்த்து பாரம்பரிய மருத்துவமுறையான சித்தமருத்துவத்தின் மூலம் சிறந்த மருத்துவர்களை கொண்டு GMP சான்றிதழ் பெற்றநிறுவனத்தின் மூலம் தயாரிக்க பட்ட இதனை ஜீஸ்வடிவில் உங்கள் இல்லம் நாடி வந்து இதன் நன்மைகள் அனைத்தும் கூறினாலும் வாங்குபர்கள் எத்தனைபேர்...? விற்பவர் வணிக முகவர்கள் அல்லவா...? ஆக்ஸ்போர்டு பல்கலையில் உள்ள இவ்வணிக பாடதிட்டங்களை இங்கு அறிமுகம் செய்யும் காலம் வரவேண்டுமே ஒழிய இதனை தடை செய்யும் காலம்தானே உள்ளது...

   Delete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்