வினோதினியின் வினோத முடிவு


வினோதினியின் வினோத முடிவு
பெண்களை தெய்வமாக போற்றிப் புகலும் நம் நாட்டில், பெண்கள் 
தனியாக வெளியே செல்லவே பயப்படும் சூழல். நாம் இந்தியாவில் 

தான்  இருக்கிறோமா? என்று கேட்கும் அளவுக்கு தொடர்ந்து 


பெண்களுக்கு  எதிரான சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

டெல்லி மாணவியின் துயரம் மறப்பதற்குள், தமிழ்நாட்டில் 
வினோதினியின் மரணம்.

ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால்ஆசிட் வீச்சு தாக்குதலில் 
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாப்ட்வேர் 
என்ஜினியர் வினோதினி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (23). ஜெயபாலன் தவமிருந்து பெற்ற ஒரே மகள் வினோதினி. தன் வாட்ச்மேன் 

உத்தியோகத்தின் சொற்ப வருவாயில் தன் மகளின் எதிர்காலத்தை 

உருவாக்க எப்படி எல்லாம் அவர் உழைத்திருப்பார்... காலங்காலமாகப் 

பட்டிக்காட்டில் உழன்ற தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி 

யாக வினோதினி பட்டம் பெற்றபோது அவர் கண்களில் பூத்த ஆனந்தக் 

கண்ணீர், இப்போது முடிவில்லாத கண்ணீராக மாறி விட்டது.

இவரை ஒருதலையாக காதலித்த சுரேஷ் என்ற வாலிபர், தமது காதலை 
ஏற்க  மறுத்ததால், அவர் மீது ஆசிட் வீசினார்.
         
     இத்தாக்குதலில் வினோதினியின் முகம், கை, தோள் முழுவதும் 


பாதித்தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக 


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை 


பெற்று வந்தார்.பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர். அவரது சிகிச்சைக்கு உதவி அளிக்க தயாராக 


உள்ளதாக  ஏராளமானோர்  கூறினர். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் 
ஏற்பட்டதுதொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை 


அளிக்கப்பட்டு  வந்ததுஇந்நிலையில் வினோதினி சிகிச்சை பலனின்றி 


உயிரிழந்தார்.

            இச்சம்பவத்தை பார்த்து நாமும்,நம் அரசும் அனுதாபப்பட்டு 
கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன் விட்டுவிடக்கூடாது. மீண்டும் இது 
போல்  சம்பவங்கள் நடக்காத வண்ணம், தண்டனையை மிகக் 


கடுமையாக்க  வேண்டும். அப்பொழுதுதான், பெண்கள் பயமின்றி 


வெளியில் நடமாட  முடியும்.    

Comments

 1. முக நூலில் படித்து, இது எவ்வளவு உண்மை என தெரிய வில்லை ?

  1) ஒரு தலைக்காதலால் சுரேஷ் ஆசிட் வீசவில்லை.
  2) சுரேஷ் - வினோதினி இடையிலான பழக்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலானது(காதலா என்று விசாரிக்கப்பட வேண்டும்)
  3) வினோதினி பொறியாளர் பட்டம் பெற தொடர்ந்து சுரேஷ் நிதி உதவி செய்து வந்துள்ளார்.
  4) சுரேசின் நிதி உதவியை வினோதினியின் பெற்றோர் மனம் உவந்து ஏற்றுக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.
  5) குடும்பச் செலவுகளுக்கும் அவ்வப்போது சுரேசிடம் இருந்து வினோதினியின் தந்தை பணம் பெற்றுள்ளார்.
  6) வினோதினியை மனம் முடித்து தருவதாக பல முறை சுரேசிடம் வினோதினியின் தந்தை உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி மொழியை மீறி செயல்பட்டுள்ளார்.
  7) சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற பிறகு தான் சுரேசை சந்திக்கவோ, பேசவோ வினோதினி மறுக்கத் தொடங்கியுள்ளார்.
  8) வினோதினி பொருள் ஈட்ட தொடங்கிய பிறகு சுரேசை வினோதினியின் குடும்பத்தினர் அலட்சிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
  9) வினோதினியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும், வினோதினியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருக்கடையுர் காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகார் நிலுவையில் உள்ளது.
  10) வினோதினியின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் சென்று வரும் அளவிற்கு அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் சுரேஷ். ஆனால் உறவினர் இல்லை.

  உண்மை எது என்று அறியாமல் பாதிக்க பட்டது பெண் என்பதால் அனுதாப பட கூடாது.

  குறிப்பு: சுரேஷ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

  ReplyDelete
 2. எது உண்மை, யாரை நம்புவது என்பதே தெரியவில்லை.

  ReplyDelete
 3. vinothi savu angalin panam, neram, uzaippu anaithayum kathal peyarai urunji vittu kadaisiyil avaigalai thookki ariyum pengalukku padamaga amaiyattum.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்